நயினாதீவு நாகதீப விகாரையில் அமைக்கப்பட்ட தொல்பொருட்காட்சிச்சாலை 03 ஏப்பிரல் 2014 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .
வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநத் கொழம்பகே ஆகியோர் இக்கட்டத் தொகுதியினை திறந்து வைத்தார்கள். விகாராதிபதி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சமயத் தலைவர்கள், கடற்படை உயர் அதிகாரிகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். அன்றைய தினம் விகாராதிபதி அவர்கள் தனது பிறந்த தினமான அன்று நயினாதீவு பிரதேச மக்கள் பொது அமைப்புக்கள் பாடசாலை மாணவர்கள் என பலருக்கும் உணவு வழங்கப்பட்டு முன்பள்ளி சிறார்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது