நயினாதீவு குறிகாட்டுவானுக்கு இடையேயான கடற்பாதைச் சேவை இன்று புதன்கிழமை தொடக்கம் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் நயினாதீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் காலை மதியம் மாலையென மூன்று சேவையில் கடற்பாதை சேவை ஈடுபடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதை தவிர்ந்த படகுச் சேவைகளும் வழமை போன்று இடம் பெறும். காலை 6மணிக்கு புறப்படும் பாதையில் பொது மக்களும் பயணிக்க முடியும். அதேவேளை வாகனங்களும் ஏற்றக் கூடியதாக இருக்கும். அத்தியாவசிய உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் லொறியும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை வேலணை பிரதேச செயலர் திருமதி. மஞ்சுளாதேவி சதீஷன் அவர்களும் . வேலணை பிரதேச சபை தவிசாளர் .திரு .சிவராசா (போல்) அவர்களும் இணைந்து பிரதேசமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்துள்ளனர் .