இன்று(23/06/2013) நயினாதீவு 3 ம் வட்டாரத்தில்திரு S. மகாதேவன் அவர்களினால் அவருடைய மனைவியின் ஞாபகார்த்தமாக திறந்து வைக்கப் பட்ட அன்னை சிவகாமி அறக் கட்டளை இலவச கல்வி நிலையம்.
இந்நிலையத்தினை தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு ஜோன் குயின்ரஷ் அவர்களினால் திறந்து வைக்கப் பட்டதுடன். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவர் திரு ப.க .பரமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டதுடன் இவர்களோடு கல்விசார் ஆலோசகர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் சமய சமூகத் தொண்டர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வைபக ரீதியாக தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு கல்விகற்கும் மாணவர்களுக்கு கருத்தரங்கு நடை பெற்றது.
மக்கள் சேவையே மகேசன் சேவை என கருதி இத்தயை நல்நெண்ண செயற்பாட்டினை செய்பவர்கள் உண்மையிலேயே போற்றப்படவேண்டியவர்ள்.
இவர்களை நயினை இணையம் பாராட்டுவதோடு மேன்மேலும் இவர்களின் சேவை தொடர எல்லாம் வல்ல நயினை நாகபூசனியம்மனை பிரார்திக்கின்றேன்.