நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் யாத்திரிகர் தொண்டர் சபை (17/6/2013)

இன்று திங்கட்கிழமை (17/6/2013) கலை 10:30 மணிக்கு ஆலயத்தின் மேற்க்கு வீதியில் யாத்திரிகர் தொண்டர் சபைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் அறங்காவலர் சபை தலைவர் திரு. பா. க. பரமலிங்கம் அவர்களும் அறங்காவலர் திரு. அ. சர்வனந்தராஜா அவர்களும் அறங்காவலர் கு. சரவனபவனந்தன் அவர்களும் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அமுதசுரபி அன்னதான சபைத் தலைவர் திரு. த. சிவானந்தன் அவர்கள் பிள்ளையாருக்கு தீபம் காட்டி ஆரம்பித்து வைத்தார். தொண்டர் சபை நிர்வாகத்தினர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நயினாதீவு அறங்காவலர்களும், மற்றும் அப்பாள் அடியவர்களும், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி நிர்வாகத்தினரும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

Recent news