நயினையில் இலங்கை வங்கி திறப்பு

நயினை மண்ணில் முதன் முதலாக நிரந்தரமாக இலங்கை வங்கி வருடப்பிறப்பை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது. 2ம் வட்டாரம் பிரதான வீதியில் விகாரைக்கு அருகிலேயே திறக்கப்படவுள்ளது. தற்போது இதன் ஆரம்பப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் பலர் நயினையில் இருந்தும் தமது தேவைகளை தினமும் கடல்கடந்து செய்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.தற்போது எமது மண்ணிலேயே இலங்கை வங்கி திறக்கப்படவுள்ளது என்று மக்கள் அனைவரும் மிக மிக சந்தோசமடைகிறார்கள்

Recent news