அமரத்துவம் அடைந்து இன்று இரண்டு ஆண்டுகள் கழிந்த அமரர். திருமதி. முத்தையா ஞானேஸ்வரி அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்... ஓம் சாந்தி...சாந்தி.. சாந்தி
அம்மா எங்களை விட்டு பிரிந்து ஈராண்டாகியும் உங்கள்
பிரிவை தாங்கமுடியவில்லை தாயே !
எங்கள் அன்பு தாயே அம்மா !
எங்களை தனியே விட்டுவிட்டு !
எங்கம்மா சென்றிர்கள் !
ஈராண்டாகியும் உங்கள் பிரிவை ,
ஏற்க்கமுடியவில்லை தாயே!
எங்களை எல்லாம் கட்டிகார்த
தெய்வமே !இனி யாரிடம் அம்மா
இருந்து பலம் பெறுவோம் தாயே!
நாங்கள் மட்டுமா கதறுகிறோம்
அம்மா?!
நமது ஊர் நயினையும் சேர்ந்து கதறுது தாயே!
நயினையில் உள்ள கோவில் ஒவ்வன்றும் உங்கள் பூந்தோட்டத்தில் இருந்து
பூவையும், பூமாலையையும் காணவில்லை என்று
பாத்துக்கொண்டே இருக்கிறார்கள் அம்மா!
ஊர்ரவர்களும், உறவுகளும்
உங்கள் உதவி இன்றி தவிகிரர்கள் தாயே!
அது மட்டுமா அம்மா. !
நமது அயலவர்கள் அழுகிறார்கள் அம்மா.!
நீங்கள் என்னன்ன பணிகள் செய்யவேண்டும் என்று
பணிதிர்களோ அம்மா!
அவை அனைத்தையும் எங்களால் முடித்ந்தை நிறைவேறற்றுவோம்.
உங்கள் ஆத்மாசாந்தி அடைய
நயினை நாகபூசணி அம்மனை
பிராத்திக்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி
Source:
Social Media