அமரர் கந்தையாபிள்ளை கனகசுந்தரம்

14ம் ஆண்டு நினைவஞ்சலி - 12 செப்ரெம்பர் 2013 நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையாபிள்ளை கனகசுந்தரம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி. தரணியில் எம்மை ஈந்து தலைநிமிர வைத்த அப்பா!! பாரினில் நாம் வாழ பலவழிகள் காட்டிய அப்பா!! பாசமழை பொழிந்து பண்புடனே நாம் வாழ வழிவகுத்த அப்பா!! காலங்கள் கடந்தாலும் நேசமுடன் உங்கள் நினைவாக வாழ்கின்றோம் அப்பா!! நினைவுகள் தசாப்தங்களைக் கடந்தாலும் கனவாக நினைத்து வாழ்கின்றோம் அப்பா!! வையகம் உள்ளவரை உங்கள் நினைவுகள் என்றும் நிலைத்திடும்-எங்கள் அப்பா..... 12-09-2013 வியாழக்கிழமை அன்று நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், அவரது இறந்த நாள் நினைவாக 17-09-2013 செவ்வாய்க்கிழமை அன்று நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் வருடம் தோறும் நடைபெறும் அன்னதானத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Similar events