திருமதி உருக்குமணிதேவி பாலசுந்தரம்
Rukumanithevi (Rtd teacher)
Balasundaram
Born |
Husband Balasundaram Nagalingam
Children 3

ஆரம்ப கல்வியை நயினாதீவு ஸ்ரீ கணேச வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா. இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இக் கால கட்டத்தில் உயர்தரப் பாடசாலை பரீட்சையில் சித்தி பெற்றவர்களே (H.S.C) பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றனர். இவர் ஆங்கில மொழி மூலம் தனது உயர் பாடசாலை தராதரத்திற்குப் பாடங்களைத் தெரிவு செய்து தோற்றிச் சித்தி பெற்று பேராதனை பல்கலை கழகத்தில் பட்டப் படிப்பினை நிறைவு செய்து வெளியேறினார். முதல் நியமனத்தினையும் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டார். இவரிடம் கல்வி பயின்ற பலர் நல்ல உயர் பதவிகளில் இருப்பது இவருக்கும் நயினை மண்ணிற்கும் பெருமை தேடித் தருகின்றது.

 

1955 – 1958 வரை பல்கலையில் பயின்றார். ஒழுக்கம் நிறைந்த மாணாக்கர் பரம்பரையினரைக் கட்டி வளர்த்த பெருமைக் இவரையே சாரும். பணி ஓய்வு காலத்தில் நயினா தீவில் இருப்பது பாராட்டப்பட வேண்டியது. 35 வருட கால ஆசிரிய சேவையினை நிறைவு செய்தவர். ஆரோக்கியத்துடன் வாழ விழைகின்றோம்.


Source: Pottamarai