நயினாதீவு தில்லைவெளி அருள் மிகு பிடாரி அம்பாளின் திரு வேள்வி திருவிழா.
எதிர்வரும் 29/05/2015 அன்று இரவு கும்பஸ்தனத்துடன் ஆரம்பமாகி,
தொடர்ந்து 06/06/2015 (சனிக்கிழமை) திருவேள்வி திருவிழா சிறப்புற இடம்பெற இருப்பதனால் அடியவர்கள் அனைவருக்கும் அம்பாளிடம் வருகை தந்து இறையருள் பெறுவீர்களாக.
ஓம் சக்தி .
---
நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வி திருவிழாவின் கும்பஸ்தானம் இன்று (29/05/2015) மாலை ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
நயினை கயிலை வாமதேவகுருக்களின் ஆசியுடன், கைலாச விஜய் குருக்கள் அவர்களால் வேள்வித் திருவிழாவின் கும்பஸ்தானம் மிகவும் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
மற்றும் பிடாரி அம்பாள் அன்னதான சபையினரால் அடியவர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Source:
Social Media