தை அமாவாசை - அபிராமிப்பட்டர் தினம்

ஸ்ரீ அபிராமிப்பட்டரைப் பற்றி .. இந்தியாவின் பொன்னி நன்னதி பொய்யாது பாயும் சோழ நாட்டிலே திருக்கடவூர் என்ற பதியிலே அன்னை அபிராமி அம்மனுக்கு ஓர் ஆலயம் இருக்கின்றது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் சரபோஜி மன்னன் ஆட்சி புரிந்த காலம். திருக்கடவூரிலே அந்தணர் மரபில் தோன்றிய ''சுப்பிரமணியர் ''என்னும் பெயருடைய பக்தர் இசைக்கலையிலே வல்லவராய் விளங்கினார். இவர் அரசவையிலே பஞ்சாங்க கணிப்புக்களைச் செய்வதில் பனி புரியும் ஒருவர். இவ் வடிகளார் அபிராமி அம்மனை ஒளி வடிவமாகக் கண்டு பேரின்பத்தில் ஆழ்ந்து விடுவார். இவருடைய ஆழ்ந்த பக்தியை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர் பித்தர் போல உலகப் பற்று அற்றவராய் விளங்கினார் . அன்று அமாவாசை தினம் சரபோஜி மன்னன் திருக்கடவூர் அம்மனுடைய ஆலயத்துக்குள் வந்தார். சுப்பிரமணியர் அச் சந்நிதியில் தியான நிலையில் உலகையே மறந்து அமர்ந்திருந்தார் .அவருடைய முகத்தில் புத்தொளி வீசியது. மன்னர் ''இவர் யார் ''? என அங்கிருந்தவர்களைக் கேட்டார் . அரசவையில் பணிபுரியும் .இவர் ஒரு பித்தர் போன்றே நடந்து கொள்கின்றார் என்று அங்கிருந்தோர் கூறினார்கள். மன்னன் பட்டரின் பக்கத்தில் நின்று "இன்றைக்கு என்ன திதி"என்று கேட்டார் .அம்மையை ஒளி வடிவமாய் கண்ட பட்டர் "பௌர்ணமி"என்று கூறினார் . அரசன் இவர் பித்தர் மனநிலை சரியில்லாதவர் என்று எண்ணினார். மன்னன் அரண்மனைக்கு திரும்பிய பின் சுய நினைவு வந்த பட்டர் நடந்த சம்பவத்தை எண்ணி அழுதார். ஆலயத்திலே அக்கினிக் கிடங்கு அமைத்தார் நூறு இழைகளில் உறி அமைத்தார். அதில் அமர்ந்தார் அம்பிகையை நோக்கி "உதிக்கின்ற செங்கதிர்"என்று ஆரம்பித்துப்பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலாகப் பாடினார், ஒவ்வொரு பாடல் முடிவிலும் உறியின் ஒவ்வொரு இழை அறுக்கப்பட்டது. சூரியன் மறையும் நேரம் வந்து விட்டது .எழுபத்தொன்பதாவது பாடல் முடிந்து விட்ட நேரம் அபிராமியின் காட்சி: அன்னை தனது காதணியை வீசிப் பூரணைச் சந்திரனாய் வானத்தில் காட்சி அளித்தாள். அரசனும் அங்கிருந்தவர்களும் வியக்க வானத்தில் ஒளி தெரிந்தது சுப்பிரமணியர் "அபிராமிப்பட்டர்"என்று அழைக்கப்பட்டார். பட்டர் நூறு பாடல்காளையும் பாடினார். அபிராமி அந்தாதி அன்னை அபிராமியின் அருளால் பாடப்பெற்றது . பக்தருக்குத் துன்பம் வராமற் காத்து அருள் பாலிக்கும் அன்னை அபிராம வல்லியின் பெருந்தகைமை போற்றப்பட வேண்டும் இவ் அந்தாதியை இடைவிடாமல் ஓதி உணர்பவர்கள் இம்மையில் அனைத்து நலன்களும் பெறுவார் .மறுமையில் முத்தி பெற்று இன்புறுவீர் .. ஓம் சக்தி .. போற்றி .... தாயே ஆகி வளர்த்தனை போற்றி ஆக்கம் M .குமரன் தை அமாவாசை அபிராமிப்பட்டர் தினம் நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது
Source: Social Media

Similar events