திரு. தம்பிமுத்து சதாசிவம், திருமதி தையல்நாயகி சதாசிவம்

மணிபல்லவ கலைமன்றம் - நயினாதீவு நயினதீவிலிருந்து கனடாநாட்டு வதிவிடவுரிமை பெற்றுச் செல்லவிருக்கும் திரு. தம்பிமுத்து சதாசிவம், திருமதி தையல்நாயகி சதாசிவம் தம்பதியினர் நயினாதீவு மாணவர்களின் கல்விவலர்சிக்கு ஆற்றிய பணியையும் சமுக, கலாசார மேம்பாட்டுக்கு ஆற்றிய சேவையையும் பாராட்டி நயினாதீவு மணிபல்லவ கலைமன்றம் வழங்கிய நினைவுச் சின்னம். இ. சிவபாதசேகரம் - தலைவர் | சி. இரத்தினசபாபதி - செயலாளர் பொ. திருச்செல்வம் - பொருளாளர் | ப. க. பரமலிங்கம் - காப்பாளர் 22/04/2013 - நயினாதீவு - 02 மாட்சி நயப்பு விருந்துபசாரமும் வழியனுப்புதலும் மேற்படி நிகழ்ச்சி 2013ம் ஆண்டு சித்திரை திங்கள் 23ம் நாள் "கொழும்பு கோட்டல் இராஜ் போஷன்"மண்டபத்தில் திரு தம்பிமுத்து சதாசிவம், திருமதி தையல் நாயகி சதாசிவம் தம்பதியினரின் நயினாதீவு மன்னிட்காற்றிய சேவையினைப் பாராட்டி மணிபல்லவ கலாமன்றம் மாட்சி நயப்பு விருந்துபசார நிகழ்ச்சியினை நடாத்தியது. மன்றத்தலைவர் திரு. இ. சிவபாதசேகரம் பொன்னாடை பொன்னாடை போர்துவதையும் உபதலைவர் திரு ப. க. மகாதேவா மலர் மாலை அணிவதையும், பொருளாளர் திரு. பொ. திருச்செல்வம் நினைவுசின்னம் வழங்குவதையும், நயினாதீவு சமுக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்க இணைப்பாளர் திரு. அ . சர்வானந்தராஜா பொன்னாடை போர்துவதையும் இங்கு காணுகிறீர்கள். மணிபல்லவ கலாமன்ற "பொற்றாமரை"மலராசிரியர் திரு சோ. தில்லைநாதனும், சமுக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்க இணைச் செயலாளர் திரு. ந. உருத்திரலிங்கமும், மணிபல்லவ கலாமன்ற துணைத் தலைவர் திரு. இ. சிவபதசேகரமும் விழா நாயகனின் சேவையை பாராட்டிப் பேசினார். முன்னால் நில அளவை உதவி அத்தியட்சகர் திரு. சி. கோபாலசுந்தரம் தம்பதியினரும் கலந்து சிறப்பித்தனர்.

Similar events