செல்வி சிந்துஜா இராமலிங்கம் - பரதநாட்டிய நிகழ்வு 10ம் திருவிழா

நயினைச் செல்வி சிந்துஜா இராமலிங்கம் அவர்கள் தனது 10வது வயதேலையே இந்தியாவிலேயே ஸ்வராலயா நட்டியப்பளியில் சேர்ந்து திருமதி வீணா ரமணியிடம் பரத நாட்டியம் நாட்டியம் கற்றுக்கொண்டார். இந்தியாவில் இவரது பாரத நாட்டிய அரங்கேற்றம் 2007இல் நடைபெற்ற பொழுது நாட்டிய விஷாரதா என்னும் பட்டம் வழங்கப்பட்டது. நுண் உயிரியலில் BSc. பட்டதாரியான இவர் நாட்டியத்தில் MA, MPhilஆகிய பட்டங்களை சென்னை பல்கலைக்கழகத்திலே முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திலும் இந்த்டியவின் பல இடங்களில் நடைபெற்ற நடன நிகழ்வுகளில் பங்கு பற்றி பல பரிசில்களை பெற்றுள்ளார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற ராஜா ராஜா சோழனின் 10000வது ஆண்டு விழாவில் பங்குபற்றி உள்ளார். முனைவர் செல்வி ஸ்வர்ணமாலாவின் நாட்டிய நாடகங்களிலும் பங்குபற்றி உள்ளார் இதன் மூலம் செல்வி சிந்துஜா ராமலிங்கம் நயினாதீவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Similar events