ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த உயர் திருவிழா - 2015

வர­லாற்றுச் சிறப்­பு­வாய்ந்த நயினை ஸ்ரீ நாக­பூ­ஷணி அம்பாள் ஆலய வரு­டாந்தப் பெருந்­தி­ரு­விழா எதிர்­வரும் 17ஆம் திகதி புதன்­கி­ழமை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­கின்­றது. இப் பெருந்­தி­ரு­வி­ழா­வா­னது எதிர்­வரும் ஜூலை 2ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பூங்­கா­வனத் திரு­வி­ழா­வுடன் முடி­வுறு­கி­றது.

 

17ஆம் திகதி புதன்­கி­ழமை நண்­பகல் 12 மணிக்கு கொடி­யேற்றம் நடை­பெற்­ற ­வுள்­ளது.

21ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை முத்­துச்­சப்­ப­றமும்

23ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை இரவு கைலைக்­காட்­சியும்

25ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பகல் எழுந்­த­ருளி அம்­பா­ளுக்கு 108 சங்­கா­பி­ஷே­கமும்

26ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை சிவ­பூஜைக் கைலைக் காட்­சியும் இரவு திரு­மஞ்­சமும்

27ஆம் திகதி சனிக்­கி­ழமை பகல் விசேட கரு­ட­கர்ப்ப பூஜையும், வாயு­பட்­சணி நாகம்­ வீ­தி­யுலா வரும் காட்­சியும், இரவு பூந்­தண்­டி­கையும் இடம்­பெறும்.

28ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை குதிரை வாக­னமும்,

29ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பகல் கைலைக்­காட்­சியும் இரவு சப்­ப­றமும்

30ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை தேர் பவனியும் இடம்­பெறும்.

01ஆம் திகதி புதன்­கி­ழமை காலை தீர்த்­தமும் மாலை திரு­வூஞ்­சலும் கொடியிறக்கமும் இடம்பெறும்.

02ஆம் திகதி இரவு பூங்காவனத்திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அடியவர்கள் வருகை தந்து அம்பாளின் அருளைப் பெறுவீர்களாக. ஓம் சக்தி.


Source: Social Media

Similar events