தீவாழன்

மதி நுட்ப மன்னவனாய் நான் ஒரு    மண்டைதீவான் அன்பால் அரவணைக்க நான் ஒரு    அல்லைப்பிட்டியான் மானசீகமாக உபசரிக்க நான் ஒரு    மண்கும்பானான் வேண்டும் போதெல்லாம் உதவியாளனாய் நான் ஒரு    வேலணையான் பூமகளின் கொடையாளியாய் நான் ஒரு    புளியங்கூடலான் சூட்சுமமான ஆற்றலால் நான் ஒரு    சுருவிலான் நாணமுள்ள வீரனாய் நான் ஒரு    நாரந்தனையான் ஊர் உறங்கும் போது காவற்காரணாய் நான் ஒரு    ஊர்காவற்றுறையான் காலத்தை வென்ற வணிகனாய் நான் ஒரு    காரைதீவான் புன்முறுவலோடு பூலோக நாயகனாய் நான் ஒரு    புங்குடுதீவான் நல்லறம் மிக்க பல்லவனாய் நான் ஒரு    நயினாதீவான் நெடுந்தூரம் சென்றும் நெறிதவறா வித்தகனாய் நான் ஒரு    நெடுந்தீவான் அலைமோதும் அன்பாளனாய் நான் ஒரு    அனலைதீவான் ஏழு கடல் தாண்டி ஏக்கமுடன் கரைசேர எட்டிக்காப்பவனாய் நான் ஒரு    எழுவைதீவான் மொத்த்தில் நான் ஒரு    தீவாழன்
Contributed by: Gopalasundaram Sinnathamby

Other blogs

Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: சின்னத்தம்பி குமாரசாமி