ஒருவார்த்தை மொழியடி

கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி.

கால்விரல்கள் தீட்டும் கோலத்தைச் சேர்த்தெடுத்து ரவிவர்மன் ஓவியத்தையும் வெல்வேனடி.

நீ சிந்தும் சில்லிடும் சிரிப்பழகை என்னுள் சேர்த்து சரித்திரமே படைப்பேனடி.

உன் விரல்கள் காட்டும் சைகைமொழி கண்டெடுத்து சுந்தர நயங்கள் சொல்லும் சாத்திரங்கள் வடிப்பேனடி.

உன் வாய்பேசும் இன்மொழியில் எந்தன் காதலையே காவியமாக்கி உலகுக்கு உவந்தளிப்பேனடி.

என்னுயிரே! ஒருவார்த்தை மொழிந்திடடி.


Author

கங்கைமகன்

Other blogs

Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: சின்னத்தம்பி குமாரசாமி