நயினைக் கீதம்

வாழிய நயினை நாகபூஷணியின்    மணிபல்லவத் திருநாடே! வளர்ந்திடும் தமிழ்க்கலை கொண்டே!    விளைந்திடும் பயிர் வளம் கண்டே! ஈழத்தின் வடபால் ஏழு பெருந்தீவில்    ஆன்னையின் நாடு – வாழிய நயினை இந்து சமுத்திரம் இயலிசை பாடிட    வந்து வணங்கிடும் அடியார் வந்தவர் குறைதனை வளமுடன் நீக்கிடும்    வரந்தரு சக்தியின் கூடு – வாழிய நயினை அருளொளி அன்னையின் அமுதசுரபியும்    அழகிய கோமுகிப் பொய்கை கடல்வளம் நிலவளம் கலைவளம் நிறைந்து நல்    களிப்புறு மக்களம் கண்டு கலைபயில முப்பெரும் கூடம்!    இந்திரன் தந்த பொற்பீடம்! கவிஞர்கள் அறிஞர்கள் கலைஞர்கள் இசைஞரகள்    கலந்து நல் புகழ்தரும் நாடு – வாழிய நயினை இந்து பௌத்தர் இஸ்லாமிய கிறிஸ்தவர்    இணைந்திட வணங்குவர் இங்கு தோண்டர்கள் வேதியர் தூயநல ஞானியர்    வந்தருள் பெற்ற நன்னாடு! இது ஒரு மணித்திரு நாடு – மணி    மேகலைத் தாயினள் நாடு மானிலமெங்கும் மகிழ்ந்து புகழுமெங்கள்    நயினை தாய்த்திருநாடே! – வாழிய நயினை ஆக்கம் : க.ந.ஜெயசிவதாசன்எழுத்துருவாக்கம் : நயினை.கொம்

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை