நயினையம்பதி வளரும் தாயே, நாகபூஷணி!
நாளும் தொழுவார் வினைகற்றும் நாகபூஷணி! - நயினையம்பதி...
அலைகளோடு தென்றல்கூடி நாணமோட
கரையை தழுவிச் செல்லும் வார்த்தை நாகபூஷணி!
மலையின் வேம்பின் கிளைகளொடு தென்றல் உரசி உரசி
இசைக்கும் இசையோடு நாகபூஷணி! - நயினையம்பதி...
கற்றிஞர் கவிஞரோடு பாடும் குயிலும்
மருதநில உழவரோடு நத்தையினமும் ஓதும் நாமம் நாகபூஷணி!
முத்திடித்து தூள்களாக்கி சிந்திவிட்ட – உன்
முற்றமெங்கும் ஊருகின்ற சிற்றெறும்பு சொல்லும் நாமம் நாகபூஷணி! - நயினையம்பதி...
ஐயம் தொடர அறிவிழந்து மெய்யும் சோரும் வேளையில்
பையவந்து காலதூதர் கயிறுதான் ஏறியினும்
அச்சம் இனிற சொல்லும் வார்த்தை நாகபூஷணி! – நான்
அச்சம் இன்றி சொல்லும் வார்த்தை நாகபூஷணி! - நயினையம்பதி...
நஞ்சுநாகம் எழுந்து வண்ணக்குடைபிடிக்க
தஞ்சா முனிவன் உன்னிடை தழுவி நிற்கும் - உன்
அருள் கோலம் கண்டு என்னிருவிழி நீர்கசிய
இருளோடு இருவினையகல
முத்திநிலையில் சொல்லும் வார்த்தை நாகபூஷணி! - நயினையம்பதி...
ஆக்கம் : நயினை இளந்திரையன் - லண்டன்எழுத்துருவாக்கம் : நயினை.கொம்
Other blogs
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை