என்ன சுகம் அந்தச் சுகம்

நாட்டமெங்கே எங்கள் நயினை எங்கே? கொண்டநற்    தேட்டமெங்கே? வந்த கனடா எங்கே? ஊட்டமுற வாழ்ந்திருந்த வாழ்வதுவும் வற்றா அருட்பெருக்கும்    சூழ்ந்திருந்த எல்லோ சுகம் அம்மாளின் கோவிலடி அப்பாற் பிடாரியுடன்    எம்மான் விநாயகர் வீரருடன் - நம்முருகன் காளி மலையினார் காட்டுள கந்தனுடன்    நாழியும் சேர்ந்திருந்தோம் நாம் பொங்கல் வருடம் பொதுவான பண்டிகைகள்    எங்குமே கொண்டாடி இன்புற்று - மங்களமாய் மேகலை நல்லரங்கில் மேன்மைக் கலை விழாவும்    ஏகமாய்க் காண்பதினி எப்போ! கூழுடன் கள்ளும் குதுகலிக்கக் குண்டானில்    சூள்பிடித்த மீன்நண்டும் சூட்டுடனே - வாழ்வாங்கு வாழ்ந்து அனுபவித்த வற்றாத அந்நாட்கள்    சூழ்ந்து தருமா சுவை? பள்ளிக்குப் போகாமல் பற்றைகளில் முற்றுகையாம்    கள்ளமதைக் கண்டவுடன் ஆசிரியர் - மௌ;ளவாய் வந்து பிரம்பாலே வாட்டிய வாட்டமதை    எந்தநாள் காண்போம் இனி? பந்தத்தில் பாசத்தில் பற்றி உறவுமுறைச்    சொந்தத்தை நாம்பகிர்ந்து சொல்லிநிதம் - சந்தோசம் பொங்கிடவே பூரித்துப் போய்நின்ற அந்தமிலா    இங்கிதநாள் எப்போ வரும்? சின்ன வயதுமுதல் சீரோடு சேர்ந்தொன்றி    மண்ணில் விளையாடி மாண்புறவே - எண்ணமெல்லாம் வண்ண மணித்தீவின் வாஞ்சை வரைந்தோமே    என்ன சுகம் அந்தச் சுகம் ஆக்கம் : Mr. Sunmuganathapillai BSc, SLEAS
Source: Author : Mr. Sunmuganathapillai BSc, SLEAS

Author

Shanmuganathapillai
Kanapathipillai
light

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை