16. கருப்பு நிறப் பூனை

கருப்பு நிறப் பூனையார்
கண்ணை மூடித் திறக்கிறார்
இருட்டில் எங்கே செல்கிறார்
எலியோ தேடித் போகிறார்

பஞ்சு போன்ற கால்களைப்
பதுங்கிப் பதுங்கி வைக்கிறார்
கொஞ்சம் கூட அமைதியைக்
குலைதிடாமல் நடக்கிறார்

துள்ளி அங்கே பாய்கிறார்
துடித்து எலி பொந்திலே
மெள்ள ஓடித் தப்பிட
வெட்கத்தோடு நிற்கிறார்.

Posted on 11/12/12 & edited 03/04/15 @ ,