ஓ பறவைகளே பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்

ஓ பறவைகளே பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்

   ஊருவிட்டு ஊருவந்து ஊசலாடும்
பறவைகளே -அந்த
   சுதந்திரத்தை  உங்களுக்கு
தந்ததாரு பறவைகளே
   ஞாலம்யாவும் சுற்றிவந்து
தங்குகின்ற பறவைகளே
   பாரிலுள்ள செய்தியெல்லாம்

பார்த்துவந்த பறவைகளே

   சுதந்திரமாய்த் திரிவதற்கு

மக்கள் செய்த பாவமென்ன ?

 

ஆக்கம் - கோபாலசுந்தரம் (S. Gopalasundaram)


Author

Gopalasundaram