ஸ்ரீ கணேச முன்பள்ளி மற்றும் வடமராட்சி முன்பள்ளி, ஆசிரியர் மாணவர்களுக் கிடையிலான கலந்துரையாடல்

தீவகத்தில் அதிகூடிய மாணவர்களைக் கொண்ட நயினாதீவு ஸ்ரீ கணேச முன்பள்ளி பாடசாலைக்கு நேற்றையதினம் வடமராட்சி, TDH நிறுவன அனுசரணையுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நிறுவன இணைப்பாளர் ஜெரோன் அவர்களின் தலைமையில், ஏனைய உறுப்பினர்களுடன் வருகை தந்த வடமாராட்சி கிழக்கு முன்பள்ளிகளின் இணைப்பாளர் ஜெயந்தினி சிவஞானம் அவர்களும், வடமாராட்சி கிழக்கின் 8 முன்பள்ளிகளின் ஆசிரியர்களும் மாணவர்களும் மற்றும் முன்பள்ளிகளின் சன சமூக நிலைய உறுப்பினர்களும் வருகைதந்திருந்தனர்.

இவர்களை எமது நிலைய நயினாதீவு ஸ்ரீ கணேச சன சமூக நிலைய முன்னாள் தலைவர் மதியாபரணம் அம்பிகைபாகன் (கிராம அலுவலகர்), மற்றும் நிலைய செயலாளர் கணேசு நாகேஸ்வரன் (ஆசிரியர் உடற்கல்வி), நிலைய பொருளாளர் சண்முகநாதன் சங்கரன் (தபாலகம்) அவர்களும் வரவேற்றனர்.

முன்பள்ளி ஆசிரியர்கள் செந்தில் குமரன் ஜெகதீஸ்வரி அவர்களும், சுபாஸ்கரன் தவமலர், நர்த்தனன் வேணுஷா, பெரியதம்பி நிரோஷா, அவர்களும் நயினாதீவு மத்தி கிராம அலுவலகர் ஸ்ரீரங்கா நாகேஸ்வரன் அவர்களும் வர்த்தகர் அமுதராசா அவர்களும் மற்றும் பெற்றோர்களும் இணைந்து வரவேற்று உபசரித்து கலந்து உரையாடி விடைபெற்று சென்றனர்.

Posted on 18/05/15 & edited 18/05/15 @ Nainativu, LK