ஈழத்தவரின் படைப்பில் நயினைத்தாய்க்கு கவசம் வெளியீடு!

Analai Express இணையதளத்துக்கு நன்றிகள்

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் பாதங்களைப் பணிந்து அம்பிகை அடியவர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். வரலாற்றுச் சிறப்பு மிகு நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்ஷவங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கும் ஐந்தாவது நாளான (21.06.15) ஞாயிறு அன்று “வரலாற்றுச் சிறப்புமிகு நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கவசம்” இறுவெட்டாகவும் புத்தகமாகவும் நயினை நாகபூஷணி அம்பிகையின் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி கலையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது மிக்க மகிழ்ச்சியளிப்பது மட்டும் அன்றி சர்வதேச இந்து கலாச்சார அமைப்பினரால் “கலை இலக்கியன்” என்ற கெளரவ பட்டமும் உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்டமையும் எண்ணற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது. நயினை ஸ்ரீ நாகபூஷணியம்மன் கவசமானது எனது கவிவரிகளிலும், செல்வி B. ஜெகனி அவர்களுடைய குரல் வளத்திலும், G. சத்தியன் அவர்களுடைய இசையமைப்பிலும் உருவாக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் நிகழ்வுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் கூற விரும்புகின்றேன் அந்த வகையில் சிறந்த குரல்வளம் கொடுத்து என் வரிகளுக்கு உயிரோட்டம் கொடுத்த செல்வி B.ஜெகனி அவர்களுக்கும், நல்லிசை தந்த இசையமைப்பாளர் G.சத்தியன் அவர்களுக்கும், ஆசியுரைகள் வழங்கிய நல்லை ஆதின குருமணி ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான பரமாசார்ய சுவாமிகள் அவர்களுக்கும், நயினை ஆதின பிரதம சிவாச்சார்யார் சிவஸ்ரீ வை.மு.ப.முத்துக்குமாரசாமி அவர்களுக்கும், நயினை நாகபூஷணி அம்பாள் ஆலய அறங்காவல சபைத்தலைவர் கா.ஆ.தியாகராசா அவர்களுக்கும், நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையினருக்கும், இவ் நிகழ்வுகளை ஒழுங்கு படுத்திய காரை எம்.பி. அருளானந்தம் அவர்களுக்கும், கவச பொழிப்புரையை வழங்கிய சிவத்திரு சரவணபவானந்தன் அவர்களுக்கும்,சர்வதேச இந்து கலாச்சார அமைப்பினருக்கும் நன்றியுரையை நல்கிய த.அமிர்தராசா அவர்களுக்கும் இந்நேரத்தில் எனது மனமார்ந்த உளப்பூர்வமான நன்றிகளினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Analai Express இணையதளத்துக்கு நன்றிகள்

Posted on 22/06/15 & edited 22/06/15 @ Nainativu, LK