கந்தையா சிவானந்தன்

ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும்
கந்தையா மகன்- சிவானந்தன் இன்று
ஆனந்தம் கொண்டு ஆன்றோர் வாழ்த்த
கூடிக் களித்த நட்புகள் சூழ
உறவுகள் மகிழ்ந்து ஒன்றாய்ச் சேர
பாரில் எழில் கொண்ட மண் சுவிஸ்லாந்தில்
அகவை அறுபத்தைந்தை கண்டான் என்று
உவகை கொண்டு வாழ்த்துவமே –இவன்
சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழ
சிந்தை மகிழ்ந்து வாழ்த்துவமே

நாகமுத்து நல்மகனை நயினை மண் பெற்றவனை
நல்லாள் லலிதாம்பாளை இல்லாள் எனக் கொண்டவனை
தன்னிகரில்லாத் தந்தையாய் மாமனாய் தாத்தாவாய் ஆனவனை
தரணியிலே நீடு வாழ நயினைத்தாய் நல்லருளை வேண்டுவமே

ஊரார் நலம் பெற உழைப்பவனை உத்தமர் மனங்களில் நிலைப்பவனை
உலகம் சுற்றும் வாலிபனை உறவுகளை அணத்து நிற்பவனை
அறுபத்தைந்து அகவை என்று எமக்கு ஆச்சரியம் தந்தவனை
ஆண்டுகள் பல வாழி என்று அகம் மகிழ்ந்து வாழ்த்துவமே

நயினை நங்கை

Event Date: 
Sunday 30 / Aug 2015
Posted on 30/08/15 & edited 30/08/15 @ ,