அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்...

அம்புலியில் அடைக்கலம்
யார் கொடுத்தார்...
கோடையைக் கண்டு
ஒழித்தோடிய குளிர் தென்றலே
வசந்தத்தை வாழவைக்க
கொடுமழை தவிர்த்தாங்கே
காற்றுப் புரவிக்குள்
கார்மேகச் சிக்கெடுக்கக்
கரைகொண்ட கடலாங்கே
நுரைதாங்கி நொடிகிறது.
காய்கின்ற நிலவதனைக்
கானாதேசம் என்றெண்ணி
தளர்நிலைப் பாட்டி - ஆங்கு
தஞ்சம் கொண்டதேனோ...
Written by: 
Posted on 16/04/15 & edited 06/07/15 @ Nainativu, LK