Ter eri varukural poosani nayinai

தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை

தேர் ஏறி வருகிறாள் பூஷணி
தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி

தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி

வார் ஏறும் உலையாடும் பூஷணி
வார் ஏறும் உலையாடும் பூஷணி
கேட்ட வரம் நல்க வரும் நாக பூஷணி
கேட்ட வரம் நல்க வரும் நாக பூஷணி

தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி

அம்மையே உன்னையே சரணடைந்தோம்
அலைகடல் தாண்டி வந்து அடி தொழுதோம்
அம்மையே உன்னையே சரணடைந்தோம்
அலைகடல் தாண்டி வந்து அடி தொழுதோம்

சிம்ம வாகனம் ஏறும் நிரந்தரியே
சின்ன சிரிப்போடு எமையாழும் புரந்தரியே
சிம்ம வாகனம் ஏறும் நிரந்தரியே
சின்ன சிரிப்போடு எமையாழும் புரந்தரியே

தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி
தேர் ஏறி வருகிறாள் பூஷணி

விழிநீரே வழிந்தின்று ஆறாச்சுதே
விழிநீரே வழிந்தின்று ஆறாச்சுதே எங்கள்
வீடெல்லாம் தீமூண்டு நீறாச்சுதே
விழிநீரே வழிந்தின்று ஆறாச்சுதே எங்கள்
வீடெல்லாம் தீமூண்டு நீறாச்சுதே

பழியென்ன செய்தோமோ காமாட்சியே
பழியென்ன செய்தோமோ காமாட்சியே
நாங்கள் படும் துன்பம் தனைதீராய் மீனாட்சியே
நாங்கள் படும் துன்பம் தனைதீராய் மீனாட்சியே

தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி
தேர் ஏறி வருகிறாள் பூஷணி

அம்மானின் முகம் காட்டி பகையோட்டுவாய்
உன் அழகான திருவாயால் தழிழூட்டுவாய்
அம்மானின் முகம் காட்டி பகையோட்டுவாய்
உன் அழகான திருவாயால் தழிழூட்டுவாய்

இம்மானிலம் சிறக்க தலையாட்டுவாய்
இம்மானிலம் சிறக்க தலையாட்டுவாய்
நாங்கள் எம்மூரில் போய் வாழும் வழிகாட்டுவாய்
நாங்கள் எம்மூரில் போய் வாழும் வழிகாட்டுவாய்

தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி
தேர் ஏறி வருகிறாள் பூஷணி

சிலம்போசை நின் காலில் ஏழவேண்டுமே
சிலம்போசை நின் காலில் ஏழவேண்டுமே
நம் திருநாட்டில் பகையோசை விழவேண்டுமே

சிலம்போசை நின் காலில் ஏழவேண்டுமே
சிலம்போசை நின் காலில் ஏழவேண்டுமே
நம் திருநாட்டில் பகையோசை விழவேண்டுமே
சிலம்போசை நின் காலில் ஏழவேண்டுமே
நம் திருநாட்டில் பகையோசை விழவேண்டுமே
நலம்சூழ தமிழ் வாழ்வு வரவேண்டுமே
நலம்சூழ தமிழ் வாழ்வு வரவேண்டுமே
உன் நாடிந்தா பிடி என்று தரவேண்டுமே
உன் நாடிந்தா பிடி என்று தரவேண்டுமே

தேர் ஏறி வருகிறாள் பூஷணி
தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி
வார் ஏறும் உலையாடும் பூஷணி
கேட்ட வரம் நல்க வரும் நாக பூஷணி
கேட்ட வரம் நல்க வரும் நாக பூஷணி

தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி
தேர் ஏறி வருகிறாள் பூஷணி நயிணை
தெரு வீதி தனில் நாக பூஷணி
தேர் ஏறி வருகிறாள் பூஷணி

Posted on 01/10/12 & edited 10/04/14 @ Nainativu, LK