Inthu Kathaiyalla Nijam

இது கதையல்ல நியம்

கலைஞர்கள் பிறப்பதில்லை அவர்கள் சமூகத்தால் உருவாக்கப்படுகின்றார்கள் என்பது ஒரு உரைகல். ஆனால் இங்கு கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை அவர்கள் கலைஞர்களாகவே பிறக்கவும் செய்கிறார்கள் என்பதற்கு இதனைவிட எந்த உதாரணத்தையும் ஒருவராலும் காட்டமுடியாது. 30 வருடங்களுக்கு முந்திய ஒரு உண்மைக் கதையின் புதியவார்ப்புத்தான் இந்த வீடியோ என்பதனை நான் நன்கு அறிவேன். கதை தொடங்கி முடியும்வரை எந்த இடத்திலும் தொய்யவிடாமல் கதையை நகர்த்திச் செல்வது என்பது ஒரு சிலருக்கே கைகூடக்கூடிய விடையமாகும். அந்தவகையில், தந்தை மகளுக்கு ஆற்ற முடியாமல் போனதை தந்தைக்காக மகள் ஆற்றியிருக்கும் சேவை ஒரு வரலாற்றுப் பதிவாகும். .......

கதையோடு ஒட்டிய கருத்துமிக்க வசனங்கள், கருத்துக்களைக் கச்சிதமாகப் பிடித்துக் கொள்ளும் பாடல் வரிகள் எல்லாவற்றையும் எங்குதான் ஷாம்பவி தேர்ந்தெடுத்தாரோ என்றுஎண்ணத் தோன்றுகின்றது. ஆனால் அந்த எண்ணங்களைச் செயற்படுத்துவதற்கு ஆரோக்கியமான தமிழ் அறிவு தேவை. அந்தத் தமிழ் அறிவைக் கொடுத்த தாயை உலக மேடையில் சிம்மானசம் போட்டு உட்கார வைத்திருக்கிறார் இதன் தயாரிப்பாளர் பவி. கலை மகளுக்குக் கிடைக்கும் கைப்பொருட்கள் எல்லாம் கலைநயம் படைத்தவை.......

இலக்கியம் என்பது எந்தக் காலத்தில் எழுகின்றதோ அக்காலச் சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடியாகக் கொள்ளப்படுவதுபோல இந்தக் கதை அமைப்பானது தில்லையுடன் சேர்ந்த நாயகியை அவர்தம் சிறந்த தமிழுக்கான வாழ்வையும் அர்ப்ணிப்புக்களையும் பார்ப்பவர் மனதில் பதியம் போட வைக்கின்றது. அனைத்துக் கலைஞர்களுக்கும் திரைக்குப் பின்னின்று உழைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். திறம்பட இதனை ஒளிப்பதிவு செய்தவருக்கும் சிறப்பு நன்றிகள். காலத்தை ஒருவன் எழுதினால் அது வரலாறாகிறது. காலம் ஒருவனை எழுதினால் அது சுயதரிதமாகிறது. இதில் நாதனின் வரலாறும் அவரது சுயசரிதமும் பின்னிப் பிணைந்திருப்பது ஆயகலைச் ஷாம்பவியின் தூய கலையாகும் என்பதனை அறிந்து அவரையும் ஒத்தாசைபுரிந்த மதன் அவர்களையும் வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.

இந்த நாடகம் எங்கள் சொந்த வாழ்க்கை எனது மகளாரின் சக தோழிகளுடன் சேர்ந்தசொந்த தயாரிப்பு. எனது 25வருட தமிழ்வகுப்பு ஆண்டுவிழாவிற்காக எனக்கு தெரியாமல் தயாரித்து வழங்கியவர்கள்.

12.02.2014 நாளை தம்பையா தில்லைநாதன் 55வது பிறந்ததினம் அதையொட்டி அவரது மகளின் தயாரிப்பை உங்கள் இணையவலையில் பதிவாக்கம் செய்யவும். முடிந்தால்.

அன்புடன்
கலை தில்லைநாதன்.

Posted on 11/02/14 & edited 06/04/15 @ Germany, DE