Sri Nagapoosani Amman Temple

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

இலங்கையில் தாய்த்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ' பரப்பரவன் சல்லி' என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக அமைந்துள்ளது.

ஆகமமரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ;டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன.

அம்பாளின் காற்சிலம்வு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இவ்வாலயம் கருதப்படுகின்றது. நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு 18 டிபா‹Éர்h áற¥ò மல® - 2012 மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்பின்னர் இவ்வாலயம் இராமலிங்கம் இராமச்சந்திரர் என்பவரால் 1788இல் கல்லுக்கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935ஆம் ஆண்டு கிழக்கு வாயில் இராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951ஆம் ஆண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச இராச கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிNஷக ம் நடைபெற்றுள்ளது.

இவ்வாலயத்தில் 1951, 1963, 1983, 1998, 2012ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிNஷகம் நடைபெற்றுள்ளது. நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களில் 1958, 1986ஆகிய ஆண்டுகளில் இவ்வாலயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியது.

இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது.

இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் பூரணைதோறும் இடம் பெறும் ஸ்ரீசக்ரபூஜையும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்பவற்றிற்காகச் செய்யப்படும் நாகசாந்தியும் நாகப் பிரதிஷ;டையும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவ்வாலயத்தில் நித்திய அன்னதானம் 1.4.1998 முதல் நடைபெறுகின்றது. வன்னியும் வேம்பும் இவ்வாலயத்தின் தலவிருட்சங்களாக விளங்குகின்றது. 1986ஆம் ஆண்டு முதல் பன்னிரெண்டு பேர் கொண்ட அறங்காவலர் சபையினர் இவ்வாலயத்தை பரிபாலனஞ் செய்துவருகின்றனர்.


[ Source : wikipedia ]

Nainativu Nagapooshani Amman Temple (Tamil: நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்) is an ancient and historic Hindu temple located amidst the Palk Strait on the island of Nainativu, Sri Lanka. It is dedicated to Parvati who is known as Nagapooshani or Bhuvaneswari and her consort, Shiva who is named here as Nayinaar. The temple's fame is accredited to Adi Shankaracharya, a 9th century Hindu philosopher, for identifying it as one of the prominent 64 Shakti Peethams in Shakti Peetha Stotram and its mention in the Brahmanda Purana. The temple complex houses four gopurams (gateway towers) ranging from 20-25 feet in height, to the tallest being the eastern Raja Raja Gopuram soaring at 108 feet high. The temple is a significant symbol for the Tamil people, and has been mentioned since antiquity in Tamil literature, such as Manimekalai and Kundalakesi. The present structure was built during 1720 to 1790 after the ancient structure was destroyed by the Portuguese in 1620. The temple attracts around 1000 visitors a day, and approximately 5000 visitors during festivals. The annual 16 day Mahostavam (Thiruvizha) festival celebrated during the Tamil month of Aani (June/July) - attracts over 100,000 pilgrims. There is an estimated 10,000 sculptures in this newly renovated temple.

Posted on 03/08/12 & edited 04/04/15 @ Nainativu, LK