Saravanamuthu Sellvathurai

சரவணமுத்து செல்வத்துரை
Full Name: சரவணமுத்து செல்வத்துரை
Title: நயினை - நல்லூர்
Born:
Native: நயினை
Residence: Canada
Occupation:
Education:
Awards:
Spouse:
Website:

சரவணமுத்து செல்வத்துரை, தனது கிராமச் சுய மொழிப் பாடசாலை ஒன்றிலேயே தமிழில் சிரேஷ்ட தராதரம் வரையான கல்வியைப் பெற்றார். தமிழில் சிரேஷ்ட தராதரம் பெற்றிருந்தும் வயதுகுறைவு காரணமாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் புதுமுகப் பரீட்சைக்கு தோற்ற தாமதிக்க வேண்டியதாயிற்று. இக்காலப்பகுதியில் அங்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நாகதீபவிகாரையில் 1944ஆம் 45ஆம் ஆண்டுகளில் தாமே விரும்பிச் சிங்களமொழி கற்றார்.

தோற்றிய முதற் பரீட்சையிலேயே ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு தெரிவுசெய்யப்பட்ட இவருக்குப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடம் தமிழ்மொழி கற்கும் பேறு அங்கு கிடைத்தது. பயிற்சியை முடித்து வெளியேறி ஆசிரியர் நியமனம் கிடைத்ததும், ஐந்து மாதகால சேவையுடன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில், தமிழ் வித்துவான் டிப்ளோமா கற்றை நெறியிற் சேர்ந்தார். இப்பயிற்சிநெறி, இவர் பண்டித மணியிடம் பெற்றிருந்த தமிழ் அறிவை விரிவும், உயர்வும் அடைய வைத்தது. இக்கற்கை நெறியில், சமஸ்கிருத மொழியினை உபமொழியாக கற்றுச் சித்தியடைந்தார்,

ஆசிரியராக் சேவை புரிந்து கொண்டே விடாமுயற்சியுடன், யாழ்ப்பாணத்தில் சமஸ்கிருத சிறிராமணிகளான தாக்க சிரோமணி பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள், வியாகரண சிரோமணி பிரம்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் என்பாவர்களிடம் வடமொழியினை நன்கு கற்றார். அத்துடன், மாவிட்டபுரம் பாலசுந்தரக் குருக்கள் அவர்களிடம் வடமொழியையும், பாளி மொழியையும் கற்றார்.

இந் நிலையில் உரையாசிரியர் இரண்டாந்தர விசேட பதவி (Grade II Sp.Post Holder) ஆசிரியராப் பதவி உயர்வு பெற்று உயர்தார பாடசாலைகளில் உபஅதிபர் தலமை பெற்றார்.
தொடர்ந்து பல தமிழ் நூல்களைத் தாமே ஆராய்ந்து வந்ததுடன், உயரிய பல வடமொழி நூல்களை அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் தாமே கற்றுத் தெளிந்தர், அத்துடன் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பாளி நூல்கள் பலவற்றையும், அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புக்களுடன் கற்றுத் தெறிய இவர், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி மாணவராக சமஸ்கிருத விசேட கலைமாணிப் பரீட்சையில்(B.A Special Degree in Sanskrit )க்குத் தோற்றிச் சித்தி பெற்றார். இப்பரீட்சையில் இவர் சித்தி பெற்ற இரண்டாம் மொழி பாளியாகும்.

இதனை தொடர்ந்து இலங்கைக் கல்வி நிர்வாக சேவை இரண்டாம் தரத்தில் (S.L.E.A.S Grade II) பதவி உயர்வு பெற்று முதன் முதலாக J/ கனகரெத்தினம் மகா வித்தியாலய( J/ Stanley central college ) அதிபரானார். அதன்பின் கல்வி அமைச்சால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கொத்தணிப் பாடசாலைகள் அமைப்பில், யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு கொத்தணியும் 16 பாடசாலைகளைக் கொண்டதுமான, J / புங்குடுதீவின் கொத்தணியின் அதிபராகவும், பாடசாலை நிர்வாகியாகவும் சேவையாற்றி இளைப்பாறினார். தற்போது இவரும் இவரது ஐந்து மக்களும், பேரமக்களும் கனடாவிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். இவரது துணைவியார் மீனாம்பாள் அவர்கள் சமீபத்திலேயே தேகவியோகமாகி விட்டார்கள்.

Posted on 22/08/14 & edited 28/04/15 @ Canada, CA