Mrs. Rukumanithevi Palasundaram

திருமதி. உருக்குமணி தேவி பாலசுந்தரம்
Full Name: உருக்குமணி தேவி பாலசுந்தரம்
Title: 23/12/1932
Born:
Native:
Residence:
Occupation:
Education:
Awards:
Spouse:
Website:

பேராதனை பல்கலைகழக கலைப்பட்டதாரி
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்.


பெண்ணடிமைக்காலம் பெண்பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத காலம். இக் கால கட்டத்தில் புகையிரத நிலைய அதிபராக இருந்த கனகசபை மீனாட்சி பிள்ளை தம்பதிகளின் புத்திரியாக உருக்குமணி தேவி நயினாதீவில் 23.12.1932ம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப கல்வியை நயினாதீவு ஸ்ரீ கணேச வித்தியாசாலையிலும் இடைநிலைக்
கல்வியை யா. இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இக் கால கட்டத்தில் உயர்தரப் பாடசாலை பரீட்சையில் சித்தி பெற்றவர்களே
(H.S.C) பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றனர். இவ ர் ஆங்கில மொழி மூலம் தனது உயர் பாடசாலை தராதரத்திற்குப்
பாடங்களைத் தெரிவு செய்து தோற்றிச் சித்தி பெற்று பேராதனை பல்கலை கழகத்தில் பட்டப் படிப்பினை நிறைவு செய்து வெளியேறினார். முதல் நியமனத்தினையும் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டார். இவரிடம் கல்வி பயின்ற
பலர் நல்ல உயர் பதவிகளில் இருப்பது இவருக்கும் நயினை மண்ணிற்கும் பெருமை தேடித் தருகின்றது. 1955 – 1958 வரை
பல்கலையில் பயின்றார்.

ஒழுக்கம் நிறைந்த மாணாக்கர் பரம்பரையினரைக் கட்டி வளர்த்த பெருமைக் இவரையே சாரும். பணி ஓய்வு காலத்தில் நயினா தீவில்
இருப்பது பாராட்டப்பட வேண்டியது. 35 வருட கால ஆசிரிய சேவையினை நிறைவு செய்தவர். ஆரோக்கியத்துடன் வாழ விழைகின்றோம்.

Posted on 17/07/13 & edited 22/08/14 @ Nainativu, LK