Mr. Nalathamby Uruthiralingam

திரு. ந. உருத்திரலிங்கம்
Full Name: Nallathamby Uruthiralingam
Born: 28/11/1948 at Nainativu
Native: Nainativu
Residence: Colombo
Occupation: Teacher, Principal

கல்வி சமூகத்தின் வழிகாட்டி நல்லதம்பி உருத்திரலிங்கம்

இந்து சமுத்திரத்தின் எழில் முத்து என வர்னிக்கப்படும் இலங்கை திருநாட்டின் சப்த தீவுகளின் மத்தியில் சிறப்புற்று விளங்கும் அன்னை பதி நாகபூஷணி அம்மன் கோவில் கொண்டெழுந்தருளி இருக்கும் கதி நயினையம்பதி.

இத்தகைய வரலாற்று சிறப்பும் ஆண்மீக சிறப்பும் பெற்ற நயினையம்பதியில் புகழ்பெற்ற விவசாயியாகவும் தனவந்தராகவும் வாழ்ந்து வந்த வேலாயுதர் பழனிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் நல்லதம்பி எனும் பெரியார். இவர் கொழும்பில் வி.பி.நல்லதம்பி எனும் வியாபார ஸ்தாபனத்தின் உரிமையாளராக வியாபாரத்தினை செய்து பல இன மக்களின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டவர்.

பழனி - நல்லதம்பிக்கு மூன்றாவது புத்திரனாக 28.11.1948 இல் பிறந்தவர் உருத்திரலிங்கம். பழனி நல்லதம்பி உருத்திரலிங்கம் தனது ஆரம்ப கல்வியை நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி வித்தியாலயத்திலும் இடை கல்வியை யாழ்.இந்து கல்லூரியிலும் கற்றார்.

யாழ்.இந்து கல்லூரியில் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்து தொடர்ந்து இவர் கொழும்பு சென்று தந்தையாரின் வி.பி.என் ஸ்தாபனத்தை சிறிது காலம் நடாத்தியதுடன் கொழும்பு.அலெக்ஸ்சான்டிரா கல்லூரியிலும் கல்வி கற்றார். தனது உயர்தர கல்வியை கொழும்பு.நாவலர் ஹோல் என்ற கல்வி நிறுவனத்தில் மேற்கொண்டார்.

இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட மாணவ ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்து 08.01.1970 இல் மாணவ ஆசிரியராக புங்குடுதீவு சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் முதல் நியமத்தை பெற்றுக் கொண்டார். 1973 தொடக்கம் 1974 ம் ஆண்டுகாலப் பகுதியில் நல்லூர்-கொழும்பு ஆசிரிய கலாசாலையில் இரண்டு

வருட ஆசிரியர் பயிச்சியினை நிறைவு செய்து பயிற்றப்பட்ட முதல்தர தமிழ் ஆசிரியராக அனலைதீவு வடலூர் அ.த.க பாடசாலையில் நியமனம் பெற்றார்.

ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றி இறுதியாக 1991ம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்கா கணபதி வித்தியாலயத்தில் கடைமையாறி ஓய்வு பெற்றார்.

ஆசிரியர் பணியை சிறப்பாக செய்த இவர் இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட 5 வருட விடுமுறையில் மாலைதீவு சென்று அங்குள்ள பாடசாலைகளில் சழூகக்கல்வி , கணிதம் , ஆங்கிலம் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்த பெருமைக்குரியவர். மாலைதீவிலும் அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என்போரின் நன்மதிப்புகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.

இவரது மனைவியார் யோகேஸ்வரி – யுனிசெப் புலமைப்பரிசில் புதுவிடியலைத் தேடி ரிஜ்வே பல்கலைக்கழகத்தில் மனையியல் B.Sc பட்டம் பெற்று ஆசிரியையாக பட்டப்படிப்பின் Diploma In Education படிப்பினை நிறைவு செய்து ஆசிரிய கலாசாலையின் விரிவரையாளராக எல்.எல்.ஈ.ஏ.எஸ் ஆக பணிபுரிந்து மாலைதீவு அரசினால் ஆசிரிய நியமனம் பெற்று மாலைதீவு சென்று அமீனிய பாடசாலை மற்றும் பல பாடசாலைகளில் விஞ்ஞானம் , மனையியல் ஆசிரியராக பல வருடங்கள் கடைமையாற்றி ஓய்வு பெற்றார்.

பழனி நல்லதம்பி உருத்திரலிங்கம் ஓய்வு நிலை அதிபரின் கல்வி பணி சிறப்புடையது. ஆசிரிய பணிகளுடன் கலைகலாசார பணிகளிலும் , சமூக பணிகளிலும் தன்னை முழுமையாக இணைத்து கொண்டவர். இவர் இளமைக்காலத்தில் சமூக சமய பணிகளில் மிகவும் ஈடுபாடு உடையவராக திகழ்ந்தார். யாழ்.இந்து கல்லூரியில் கற்கும் போது இந்து சமய கலாசார மன்றங்களில் பத்திராதிபதியாக பணிபுரிந்தார்.

நயினாதீவு மணிபல்லப கலாசார மன்ற ஆரம்பகால உறுப்பினராகவும் செயலாளராகவும் கடமையாற்றியதுடன் தற்பொழுது கணக்காளராகவும் கடைமையாற்றி வருகின்றார். நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் அமுதசுரபி அன்னதான சபையின் ஆயட்கால அங்கத்தவராக இருந்து தர்மகத்தாவாக உபசெயலாளராக செயலாற்றி அன்னம் அளிக்கும் தொண்டினை செய்து வருகிறார்.

நயினாதீவு வடக்கு கிராம முன்னேற்ற சங்க உபசெயலாளராக பணிபுரிந்துள்ளார். உலக சைவப்பேரவையின் கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராக கடைமையாற்றி வருவதுடன் வருடந்தோறும் மகாசிவராத்ரி தினத்தன்று கொழும்பு ஜிந்துப்பட்டி சிவசுப்ரமணிய கோவிலில் நந்திக் கொடியினை விற்பனை செய்யும் சமயப்பணிகளை திறம்பட ஆற்றிவருகின்றார்.

இலங்கை தமிழ் சங்கத்தில் 2004ம் அண்டில் இருந்து ஆயட்கால அங்கத்தவராக செயற்பட்டு வருவதுடன் 2013-2014 ம் ஆண்டுகளில் ஆட்சிக்குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு தமிழ் சங்கம் மூலம் பற்பல தமிழ் நிகழ்ச்சிகளை நடாத்தி தமிழ்ப் பணிகளை நடாத்தினார்.

கொழும்பிலுள்ள ஏனைய தீவுப்பகுதி (புங்குடுதீவு , அனலைதீவு , நெடுந்தீவு , வேலணை) மக்களின் நன்மதிப்பை பெற்றதுடன் அவ்வூர் மக்களுக்கும் தன்னால் இயன்ற சமூகத்தொண்டினை செய்துவருகின்றார். புங்குடுதீவு , அனலைதீவு , மண்கும்பான் ஆகிய ஊர்களில் கற்பித்த காலங்களில் பலநிகழ்வுகளை நடாத்தி ஊர்மக்களின் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றார்.

கொழும்பு வாழ் நயினை மக்களின் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதுடன் அந்நிகழ்ச்சிகளை செய்துமுடிக்கும் வல்லமையும் அனுபவமும் கொண்ட சமூகத்தொண்டனாக தனது ஓய்வ நேரத்தை மக்களுக்காக அர்ப்பணித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்மையில் கனடாவில் அபிவிருத்தி சங்கத்தினால் நடாத்தப்படும் தீபம் நிகழ்ச்சியில் கௌரவித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள் என்பதும் , நயினை மக்களாலும் புங்குடுதீவு மக்களாலும் வரவேற்று விருந்துகள் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Retd. Principal

Hony. Asst. Secretary
Nayinatheevu - Sri Nagapoosani Amuthasurapi Annathana Sabai

Hony. Auditor
Nayinatheevu - Manipallava Kalamanram

Hony. Vice President
Nainatheevu - Socio Economic Education & Cultural Development Society

Contributor of nayinai.com

Posted on 18/10/12 & edited 02/12/15 @ Colombo, LK