ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் நயினாதீவின் 2 பிரதான வீதிகள் புனரமைக்கும் திட்டம்

[ Photo courtesy : Nayinai Kumaran ]

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையினரின் ஏற்பாட்டில் நயினாதீவின் 2 பிரதான வீதிகளான விநாயகர்வீதி (நயினாதீவு தீர்த்த கரைக்கு செல்லும் பிரதான வீதி) மற்றும் முருகன் வீதி (நயினாதீவு இந்து மயானத்திற்கு செல்லும் வீதி) இவை இரண்டும் புனரமைக்கப்படவுள்ளது.
13/07/2013 அன்று இடம்பெற்ற ஆலய அறங்காவலர் சபை கூட்டத்தின் போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனுடன் ஆலய வடக்குப்புறத்தில், காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ஐயனார் ஆலயமும் புதிதாக புனரமைக்கப்படவுள்ளது.
இவ் வேலைத்திட்டங்கள் எதிர் வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Posted on 18/07/13 & edited 01/04/14 @ ,