வீதி அதிகார சபையினரே.இது உங்களின் கவனத்திற்கு

நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த பாதை படகு ஒரு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் குறிகட்டுவான் துறை முகத்தில்
தரித்து நிற்கின்றது. இவ்வளவு நாட்கள் கடந்தும் இது வரையிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் தரித்து நிற்கும் இப் பாதைப் படகிற்கு புதிய இயந்திரம் 2 எடுத்துவரப்பட்டும் இதுவரைக்கும் பொருத்தப் படவும் இல்லை.

பாதைப் படகில் ஏற்பட்டுள்ள சேதாரங்களும் திருத்தி அமைக்கப் படவில்லை நயினாதீவுக்கு இலவசமாக சேவையை வழங்கி வந்த இப் படகின் தற்போதைய நிலை என்ன?

ஊரில் அபிவிருத்திப் பணிகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு பெரிதும் உதவி வந்த இப் படகானது பழுது பார்க்காமல் தரித்து நிற்பது ஏன்? மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமா?

சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.

பயணத்திற்காய் காத்திருக்கும் மக்கள்

Posted on 22/02/17 & edited 22/02/17 @ Nainativu, LK