பாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில்

நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டு இன்னும் ஓரிரு நாட்களில் சேவையில் ஈடுபட வாய்ப்புள்ளது.

இருந்த போதும் இதன் சேவையினை நயினாதீவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என மக்களும் வெளி இடங்களில் பணி புரியும் அரச உத்தியோகத்தர்ளும் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர் நயினாதீவுக்கென சேவையில் ஈடுபட வந்த பாதை குறிகாட்டுவானில் இருந்து சேவையினை ஆரம்பிப்பதால்.

நயினாதீவில் இருந்து வேலை நிமித்தம் வாகனங்களில் செல்பவர்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இதனை உங்களின் கவனத்தில் எடுத்துக்கொண்டு மக்களின் பயணத்திற்கு ஏற்றவாறு பயண சேவையினை மாறி அமைத்து சேவையினை தொடர எதிர் பார்க்கிறோம்.

Posted on 01/05/17 & edited 14/05/17 @ Nainativu, LK