நயினை மைந்தன் தேசிய ரீதியில் தமிழ் மொழி. பிரிவு முதலிடம்

Nayinai Kumaran

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று .நயினாதீவு 5 ம் வட் டாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் கோகுலதாசன் [குலம்] அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி தேசிய ரீதியில்முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர். வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

தேசிய ரீதியில்முதலிடம் பிடித்து சாதனை படைத்த அபிசிகனை தொடர்புகொண்டபோது, தான் இந்த பெறுபேற்றினை பெற்றுகொள்ள தனக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

Posted on 09/10/16 & edited 09/10/16 @ Vavuniya, LK