நயினை மண்ணின் மைந்தனுக்கு ஆசிரியர் உயர் விருதான பிரதிபா பிரபா விருது 2016

Nayinai Kumaran

யாழ் அனலைதீவு சதாசிவமகாவித்தியாலய முன்னாள் அதிபர் யாழ் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபரும் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய முதல்வருமான நயினை மண்ணின் மைந்தன் திருவாளர் வீ. ஓங்காரலிங்கம் அவர்களுக்கு நேற்றைய தினம் கொழும்பில் கௌரவிப்பு.

"தேசத்தின் சிறார்களை எதிர்காலச் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கத் தேவையான நிபுணர்த்துவம் மிக்க பரிபூரண நற்பிரஜைகளாக சமூகத்திடம் கையளிக்க சிறந்த தலமைத்துவத்தை வழங்கி பாடசாலையை வெற்றிகரமாக வழிநடத்தும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை கௌரவித்து" கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் "பிரதிபா பிரபா விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எமது மண்ணிற்கு பெருமை தேடித்தந்த எம் மண்ணின் மைந்தனை இன்றைய ஆசிரியர் தினம் 06/10/2016 நன் நாளில் வாழ்தி அவர்களின் கல்வி பயணம் மென் மேலும் சிறந்து விளங்க பாராட்டி வாழ்த்துகின்றேம்.

வாழ்க வளமுடன்..

Posted on 07/10/16 & edited 07/10/16 @ Colombo, LK