நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் - மாபெரும் மரம் நாட்டும் வைபவம்

நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம் (பிரித்தானியா) அனுசரணையுடன் நயினாதீவில் இன்று (31/10/2015) இடம்பெற்ற மாபெரும் மரம் நாட்டும் வைபவம்.

நிகழ்வில் நயினை மண்ணின் உத்தமர்கள் சின்னையா நல்லையா (முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி) அவர்களின் குடும்பதினர்களால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இருந்து மங்களகரமாக தம்பதியினரை அழைத்து வருகின்ற நிகழ்வும் ஆலய வெளிப்புறத்தில் மரம் நாட்டும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து.

தம்மை உருக்கி நயினாதீவு மாணவர்களின் கல்வி வளர்சிக்காய் பெரிதும் உதவி வரும் நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகத்தின் கல்வி நிலைய வளாகத்தில் புதிதாக
அமைக்கப்படவுள்ள அலுவலகம் மற்றும் வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்காய் வருகை தந்த மண்ணின் மைந்தனை மாணவர்கள் வளாக முன்றலில் மலர் தூவி வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கு இடம்பெற்ற மதிய போசன நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றதுடன்.

உத்தமர்களை மாணவர்களின் பெற்றோர்கள் பொன்னாட அணிவித்து கௌரவிப்பதையும் அதனைத் தொடர்ந்து நயினாதீவு மக்களின் வைத்திய தேவைகளை வைத்திய சாலை பொறுப்பதிகாரி அவர்களிடம் கேட்டறிந்து அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர் எம் மண்ணின் நிலைகள் தேவைகள் என்பவற்றை அறிந்து அபிவிருத்தி பணியினை மேற்கொள்ளும் நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகத்தின் அளப்பெரிய பணியினை நயினாதீவு மக்கள் மிகவும் நன்றியுடன் வரவேற்று
பாராட்டுகின்றனர்.

மென்மேலும் உங்கள் பணி தொடர சிறக்க வாழ்த்துகின்றோம்.

Posted on 01/11/15 & edited 01/11/15 @ Nainativu, LK