Forum

Forums:

இராசலிங்கம் சிவமலராகிய நான் அறியத்தருவது எனது கணவருக்கு 2016 பங்குனி மாதம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்து இதயத்தில் பிரதான குழாய் சுருங்கியுள்ளது என்றும் இதற்கு பதிலாக வேறு குழாய் மாற்ற வேண்டுமென கூறியுள்ளார். 02.01.2017 நடைபெற்ற கிளினிக்கில் இந்த சத்திரசிகிச்சை உடன் செய்யாவிட்டால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் ஆபத்து ஏற்படும் என்று சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் திரு.ஆ.குருபரன் கூறியுள்ளார்கள். இதற்கான மொத்த செலவாக ரூ.12லட்சம் தேவைப்படுமென கூறியுள்ளார். இத் தேவைக்கான நிதி உதவி வேறு அமைப்புகளிடமும் கேட்டுள்ளேன்.

விநாயகப் பெருமான் ஐரோப்பாவாழ் அன்புள்ளங்களின் பேராதரவினால் மஞ்சத்திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றது. உங்களினது மனமுவந்த நிதியினை நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் செயற்படுகின்ற அன்பர்களிடம் கையளித்து இறைபணி நிறைவேற வேண்டிநிற்கின்றோம்.

எம்மால் இயன்றவரை தொலைபேசி ஊடாக தொடர்ந்து தொடர்பு கொள்கின்றோம். எம்மால் தொடர்பு கொள்ளமுடியாத இறையுள்ளங்கள் செயற்படுகின்ற அன்பர்களிடம் தொடர்புகொண்டு இறை பணியில் பங்கேற்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

தொடர்பு கொள்ளவேண்டியவர்களின் பெயர்களும் தொலைபேசி இலக்கமும் வெகு விரைவில் அறியத்தருவோம்.

நயினாதீவு வைத்திய சாலையில் வீற்றிருக்கும் வைரவப்பெருமானின் ஆலய திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதால் நயினை வாழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பையும் புலம் வாழும் எம்மூரின் உறவுகளிடம் இருந்தும் உதவியை நாடிநிற்கின்றோம்.

உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க இவ் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள் 021 321 3583 (வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி)

எமது நோய் தீர்க்கும் வைத்தியசாலை, எம்மை காத்தருளும் வைரவப்பெருமான்.

அன்புக்கும் மதிப்புக்குமுரிய நயினை வாழ் புலம் வாழும் உறவுகளே வணக்கம்

நயினாதீவின் மேற்கு கடலேரம் அமர்ந்திருந்து அனைவருக்கும் அருள் வழங்கும் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக இடம்பெற்று கொண்டிருக்கும் திருப்பணி வேலைகளில் நீங்களும் பங்கு கொண்டு ஆலய வளர்ச்சிக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முன்வாருங்கள்.

அன்புக்கும் மதிப்புக்குமுரிய புலம் வாழும் எம் நயினை மண் உறவுகளே எம் நாட்டில் வாழும் உறவுகளே வணக்கம்.

உங்கள் பங்களிப்பில் எழுந்து நிற்கும் உங்கள் ஐயப்பன் ஆலய அழகைப்பாருங்கள், நீங்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கம்பீரமாக காட்சி தரும் 18 படி ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய மற்றும் மலையின் ஐயனார் சுப்பிரமணியப்பெருமான் கடலேடு தாலாட்டும் ஆலய எழில்கொஞ்சும் அழகுமிகு கட்சியைபாருங்கள்.

Forums:

இன்னும் 3 நாட்கள் தான் இருக்கின்றது இந்த பிஞ்சு குழந்தையின் இதய சத்திர சிகிச்சைக்கு

அன்புள்ள புலம் வாழ் நயினாதீவு, புங்குடு தீவு உறவுகளுக்கு அவசர அவசிய உதவி கோரல்.

இங்கே காட்டப்பட்டிருக்கும் இந்த பிஞ்சு குழந்தைக்கு 28/10/2013 அன்று இதய சத்திர சிகிச்சையை கொழும்பில் பிரபல வைத்திய சாலையில் செய்வதற்கு சுமார் 400,000 இலட்சம் ரூபா மட்டில் அவசியம் தேவைப்படுவதால் உயிர் காக்கும் உத்தமர்களிடம் இருந்தும் அபிவிருத்தி ஒன்றியங்களிடம் இருந்தும் அவசர உதவியினை வேண்டி நிற்கின்றோம்.

அன்பான உறவுகளே உங்களால் முடிந்த சிறு தொகையேனும் அனுப்பி இக் குழந்தையின் உயிரை காப்பற்றுங்கள்.

Forums:

நயினாதீவை தேசிய மின்சார வலைப்பின்னலுக்குக் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். கிராமம் முழுவதற்கும் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும். காற்றாலை மூலம் உள்ளூர் மின்சாரம் உற்பத்தி செய்ய காற்றாலை பண்ணை அமைக்க இங்கு சிறந்த வாய்ப்புண்டு - வருடத்தில்கூடிய காலம் வேகமான காற்று வீசுவதால் காற்றாலைப் பண்ணை அமைக்க நயினாதீவு சிறந்த இடமாகும். பெரிய காற்றாலை பண்ணை அமைக்கப்படின் மேலதிக மின்சாரத்தை தேசிய வலைபின்னலுக்குட்பாய்ச்சலாம்.

Forums:

நயினாதீவின் குடிநீர் தேவையை சாட்டியில் இருந்தோ, அல்லது இரணமடு நீர்விநியோகத் திட்டத்தின் மூலம் தீர்க்கப்படவேண்டும்.

Forums:

சமய விழுமியங்கள் உள்வாங்கப்பட்ட சுற்றலா விடுதிகள் அமைக்கப்படவேண்டும்.

Forums:

கழுதைப்பிட்டிக்கும் - நயினாதீவுக்கும் இடையே படகுச் சேவை ஆரம்பிக்கப்படவேண்டும்.

Pages