அமரர் கிருஸ்ணசாமி குமரகுரு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஸ்ணசாமி குமரகுரு
தோற்றம் : 11 நவம்பர் 1968 — மறைவு : 22 செப்ரெம்பர் 2014

திதி : 10 ஒக்ரோபர் 2015

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணசாமி குமரகுரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமது குடும்ப நாயகனே!
அன்புள்ள அண்ணாவே!
ஆண்டொன்று வந்துவிட்டது
ஆறமுடியாமல் தவிக்கின்றோம் அண்ணா!!

எம் துயர் தீர்ப்பதற்கு எமக்கு இங்கு யாருமிலர் அண்ணா!
உங்கள் திருமுகமே நித்தம் எமை தாலாட்ட வருகிறது
நீங்கள் பிடித்த ஒலிவாங்கி ஓசையற்று கிடக்கிறது அண்ணா!
உங்கள் வரவுக்காய் காத்திருக்கும் மேடைகளில்
கனத்த உங்கள் காந்தக்குரல் இனி எப்போ நாம் கேட்போம் அண்ணா!!

எமது அன்பு அண்ணாவின் ஆத்மசாந்திக்காய் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளைப் பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி .

Event Date: 
Saturday 10 / Oct 2015
Posted on 10/10/15 & edited 22/10/15 @ ,