திரு சின்னத்தம்பி கோபாலசுந்தரம்

எண்பதாவது பிறந்தநாள் வாழ்த்து / 16-01-2017

மணித்தீவு பெற்றெடுத்த மகிமைமிகு மைந்தன்
துணிவுடையான் துன்பங்கள் கண்டு துவளா மனமுடையான்
அணிகலன்களாக நற்பண்புகளைப் பூண்ட – கோபாலசுந்தரமாம்
மணிமகன் இந்த மண்ணில் மலர்ந்து அகவை எண்பது ஆனது இன்று.

கண்பார்த்தால் கைசெய்யும் என்று உமைப் பார்த்துத்தான் –இந்த
மண்ணில் மாந்தர்கள் சொன்னர்களா எனத்தோன்றும்
எண்ணிலடங்காத் திறமைகள் எப்படி உமக்குள் வந்ததுவோ ! – அகவை
எண்பதை அடைந்த இளம்காளை நீ மனம் போல நீடூழி மண்ணில் வாழியவே

நம்பியாண்டார்நம்பி திருமுறைகளை வகுத்ததுபோல் –சின்னத்
தம்பியான் மகனும் நயினைத் தலைமுறைகளைத் தொகுத்தே
நயினத்தளத்தில் பதிவு செய்யும் நற்பணிபுரியும் நாகம்மா நல்மகனே !
நலமோடும் புகழோடும் இந்தப் பூலோகம் தன்னில் நீடூழி வாழி !

மதிகொண்ட மகள்மார்கள் தம் திறமையினால் - மக்கள்
விதிதன்னை மாற்றல் கண்டுமனம் மகிழ்ந்து நீர் நீடு வாழி
அதிபதிகளாய் உம் மக்கள் ஆவது கண்டு ஆனந்தம் கொண்டு
சதிபதியாய் உம் சரசு வதியோடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழி!

Event Date: 
Monday 16 / Jan 2017
Posted on 17/01/17 & edited 17/01/17 @ , CA