திரு குருபரன் ஓங்காரநாதன்

பிறந்தநாள் வாழ்த்து

பாசத்தால் தன்பக்கம் பலரையும் ஈர்க்கும்
நேசம் நிறைந்த நல்நெஞ்சக்காரன்
ஈசனவள் பெற்ற பாசமகன் குருபரன்
காசுமிகுந்தோர் வங்கிக்கணக்கிலிடும் தேசத்தில்
கிள்ளைமொழி பேசும் விஜியோடும்
பிள்ளை அகலோடும் பிறந்தநாள் கண்டான் இன்று.
.
ஊர்ப்பற்று மிக்கவனை ஓங்காரம் தன் மகனை
நேர்வழியில் வாழ்பவனை நேர்மையில் சிறந்தவனை
பாரெல்லாம் பவனிவரும் தாராள மனத்தவனை
கூர்கம்பிகளை ஓடவிட்டு மணி கூறும் நுட்பம் மிகுந்தவனை
தேரோடும் நயினைத்தாய் திருவருள் நிறைந்தவனை
சீரோடும் சிறப்போடும் நீடு வாழ வாழ்த்திடுவோம்.

Event Date: 
Monday 09 / Jan 2017
Posted on 12/01/17 & edited 12/01/17 @ , CH