திருமதி பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை

எழுபத்தைந்தாவது பிறந்தநாள் வாழ்த்து - 5/01/2017

பெருவணிகன் சு. கு மென்மைக்கு அர்த்தம் சொன்ன வள்ளியம்மை பெற்ற மூத்த பிள்ளை
நாடெல்லாம் நன்கறிந்த வித்துவான் சி.கு வை மாமன் எனக் கொண்டு மகிழ்ந்த மருகி
நயினைக்கவிஞன் ஆளுமையில் சிறந்த அதிபன் நா. க சண்ணை நாயகனாகக் கொண்ட துணைவி
நல்லாள் பத்மாசனிதேவி நாகம்மை நல்லருளால் பவளவிழா கண்டாள் இன்று

தமிழ் மோகம் கொண்ட தலைவனைக் கொண்டவளே!
தமிழை வாழவைக்கும் பிள்ளைகளைப் பெற்றவளே!
தமிழ்க்கடவுள் அவனருளாலே ஆறு பேரர் கண்டவளே!
தமிழ் போல நீயும் தரணியிலே நீடு வாழி!

சிவனின் மறுபாதி தேவி என்று சமயங்கள் சொன்னதுண்டு – அவன்
மகனின் பெயர் கொண்ட துணையின் பாதியாய் தாதியாய் வாழும் தேவியே!
அட்ட சகோதரர்கள் அன்புப் பிள்ளைகள் பேரர்கள் அன்பினில் திளைத்து
மட்டற்ற மகிழ்வோடும் மாறாத புகழோடும் மனம்கவர் துணையோடு நீடு வாழி!

Event Date: 
Thursday 05 / Jan 2017
Posted on 17/01/17 & edited 17/01/17 @ ,