இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுபத்திரா

தாய்மைக்கு இன்று பிறந்தநாள்

என் தாயின் பிறந்தநாள் !
பெற்ற தாயின் பெருமை
சுகமான என் வருகை ( பிரசவம் )
பிறந்த நாள் முதல் பெருமை
சிற்றன்னையின் வளர்ப்பு ....
பேர் உவகை கொள்கிறேன்
பெருமை உனை சேர .....
நிலம் நான் தடம் பாதிக்க நின்
கை இறுக பற்றி நல்ல
தடம் நான் நடக்க நல் வழி காட்டி !
இங்கு வாயும் வயிறும்
ஒன்றென பாசம் அதை உணர்த்தி
தாய்க்கு நிகர் தாய்மொழியாம்
ஆசானாய் நின்று அறிவு தந்து !
பாசம் என்னவென்று மாசு
இன்றி நீ உணர்த்தி .....
பாதி வழியில் காலன் பறித்த
தாய் பாசம் அதை நேசம்
குறையாமல் நின் மனத்தால்
நீர் சுரந்தாய் .... சித்தி !!
யாரும் அடையா பலன்
யாம் பெற்றோம் இப் பிறப்பில் !
பெருமைகள் பல உண்டு என்
அன்னை உனக்கு உண்டு !!
பேறில்லா ஆனந்தம் உன்
பிறந்த நாள் வாழ்த்து கூற ..
பிள்ளைகள் நாங்கள்
பிரிந்த பல தேசங்களில்
ஒன்று கூடி ஓர் மனதாய்
ஓர் வரியில் வாழ்த்துகிறோம்
நீடுடி வாழ்க எம் தாயே
என் தாயே !!!!!!!!!!

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுபத்திரா !!!!!
என்றும் உன் அன்பு மகன் நிசாந்தன்
எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கு தினம் தினம் என் கவலை !!!!!!!!!!

Event Date: 
Sunday 29 / Jan 2017
Posted on 29/01/17 & edited 29/01/17 @ Nainativu, LK