திரு திருமதி இளங்கோ

இருபத்தைந்தாவது ஆண்டு திருமணநாள் வாழ்த்து

வைத்தியர்களிருவர் வாழ்வில் இணைந்து
வந்தவை யாவையும் சமமெனப் பகிர்ந்து
வரமாய் மூன்று செல்வங்கள் பெற்று-உளமார மகிழும்
உம் வாழ்வு தன்னில் வந்ததே இன்று வெள்ளிவிழா!
வெள்ளிவிழா காணும் கண்ணான தம்பதிகாள்!
உள்ளமெல்லாம் வெள்ளையென உவந்தே சேவை செய்து
அள்ளஅள்ளக் குறையாத அம்பிகையின் அருள்பெற்று
தெள்ளுதமிழ் போல தெம்மாங்கு இசை போல
கண்ணதாசன் கவி போல காலமெல்லாம் நீடு வாழி!
வாழி! வாழி! வையகமும் வானகமும் இருக்கும் வரை வாழி!
வாழி ! வாழி! வைகை போல் வளமோடும் உடல் என்றும் நலமோடும் வாழி!
வாழி! வாழி ! இளங்கோ சுமதி போல் இணையர் எவருமில்லை என்றிடவே வாழி!
வாழி !வாழி ! உறவுகள் நட்புக்கள் உள்ளம் கவர்ந்த உத்தமர்களே நீடு வாழி!
வாழி! வாழி ! வாழி! வாழி! வரும்நாட்கள் எல்லாம் வசந்தமாக வந்திடவே நீடு வாழி!
வாழி! வாழி! வெள்ளிவிழா நாயகர்களே ! கள்ளமில்லா
உங்கள் உள்ளம் போல் காசினியில் நீடு வாழி!

Event Date: 
Tuesday 24 / Jan 2017
Posted on 05/02/17 & edited 05/02/17 @ , CA