பக்தர் பலரின் கைங்கரியம் - புதிய தேர்

நாகேஸ்வரி ஆலயத்தில் சிறந்த கோபுரமும் இருநிலைவிமானமும் கட்டப்டபெற்றுள்ளன. ஆனால் அம்பாள் நெடுங்காகாலமாகப் பழையதொரு தேரிலேயே திருவிழாவின்போது பக்தர்களுக்குக் காட்சியளித்து வந்தாள். அந்தத் தேர் இழுபடும்பொழுதே ஈடாடத் தொடங்கியதைக் கண்டு பக்தர் பலர் கவன்றனர். இந்தக் கவலை தேர்த்திருவிழாவுக்குச் சென்றிருந்த பலரிடம் தோன்றியது. திருவருள் கூட்டிவைக்க, பக்தர் பலர் ஒன்றுகூடி அம்பாளுக்குப் புதியதொரு தேர் அமைத்து இழுக்கும்வரை உறங்கமாட்டோம் எனக் கங்கணம் கட்டினர். வடமாகாண அதிபர் திரு. எம். ஸ்ரீகாந்தா அவர்களைத் தலைவராகக்கொண்டு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேர்த்திருப்பணிச் சபை ஒன்று அமைக்கப்படலாயிற்று.இச்சபைக்கு ஊர்காவற்றுறைக் காரியாதிகாரி திரு. செ. சிவஞானம், திரு ஆ. கந்தையா ஆகியோர் தனாதிகாரிகளாகவும் திரு வே. சுந்தரம்பிள்ளை, திரு வே. செல்வநாயகம், திரு கா. ஆறுமுகம் ஆகியோர் செயலாளராகவும் கடமையாற்றினார்.

இத்திருப்பணியில் ஆரம்பத்திலிருந்து அருந்தொண்டாற்றிய விவேகனந்த அச்சக அதிபர் திரு வே. சுந்தரம்பிள்ளை அவர்கள் 27 - 2 - 1957 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். திருப்பெருந் திரு குன்றக்குடி அடிகளாரின் ஆலோசனையின் பேரில் நாகர் கோயில் திரு எஸ். குமாரசாமி ஆசாரியார் அவர்கள் நயினாதீவு நாகேஸ்வரியின் திருத்தேர்ப் பணியைக் கையேற்றார்கள். திரு குமாரசுவாமி ஆசாரியார் தேர்ச்சி பெற்ற நூண்தடொழில் வல்லுநர் சிலரையும் தம்முடன் கூட்டி வந்து தேர்த்திருப்பணிச சபைக் காரியதரிசியாகவிருந்த திரு வே.சுந்தரம்பிள்ளை அவர்களுடைய வளவில் தேர்த்திருப்பணியை ஆரம்பித்தார்கள். முதன் முதலில் அவர்கள் மூஷிக வாகன விக்னேஸ்வரருடைய திருவுருவத்தைப் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கினார்கள். பின்னர் அவ்வாண்டில் நாகபூஷணி அம்பாளைப் புதிய தேரில் உலாவரச் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் அல்லும் பகலும் உழைத்து வந்தார்கள். அவர்களுடைய பணி அம்பாள் அருளினால் முட்டின்றி நிறைவேறிவிட்டது. இரதோரற்சவம் சிருட்டி முதலிய பஞ்ச கிருத்தியங்களுள் சங்காரத்தைக் குறிக்குமென ஆகமங்கள் கூறுகின்றன.

Picture 4:
தவத்திரு குன்றக்குடி அடிகளார், வடமாகான அதிபர் திரு. ம. ஸ்ரீகாந்தா, திரு. வே. சுந்தரம்பிள்ளை முதலிய பிரமுகர்களுடன் தேர்த் திருப்பணியைப் பார்வையிட்டனர். (17 - 03 - 1957)
பல்வகைத் தேர்
தேர்கள் பலவகைப்பட்டனவாயினும் அவற்றின் உருவ அமைப்பில் அதிக வேற்றுமை காணப்படவில்லை.

தேர்கள்: மரத்தேர், வெள்ளித்தேர், தங்கத்தேர் முதலியவை உண்டு. தேர்களில் மிகச் சிறந்த சிற்பவேலை செய்து பதிக்கப்பெரும். உருளை நான்கு முதல் பத்து உருளைவரை இருப்பது உண்டு. திருவாரூர் தேர் மிகப் புகழ்பெற்றது. ஸ்ரீ வில்லிபுத்தூர்த் தேர் மிகப் பெரியதேன்பர். தேர் ஒட்டுதல் ஒரு சிறந்த கலை. எல்லாராலும் முடியாது. புறப்பட்ட பிறகு நிலைக்குச் சேற்பித்தல் மிகக் கடினம். ஆயிரக்கணக்கான மக்கள் அதனை இழுக்கவேண்டும். தெப்பத்தேர் நீர்மேல் மிதக்கும் தேர். இது இக்காலத்தில் மின்சாரவிலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வெகு சிறப்பாகச் செய்யப்படுகின்றது. வெள்ளித் தேர்கள் திருவண்ணாமலை, பழனி முதலிய இடங்களிலும் உண்டு. வாகனம், தேர் இவைகளைச் செய்யும் தொழிலும் ஒரு சிறந்த தொழிலாகும் என்று கூறுகிறார்கள் இராவ்பகதூர் சி. எம். இராமச்சந்திரச் செட்டியார் அவர்கள்.

தேர்களைப் பெரும்பாலும் தாமரை மொட்டுவடிவிலேயே அமைத்தனர் என ஊகிக்க இடமுண்டு. மேலும் கொடுஞ்சி என்ற ஓர் உறுப்பும் தேர்களிலே அமைக்கப்பெற்றிருந்தமை நோக்கற்பாலது.

Posted on 14/02/13 & edited 14/02/13 @ ,