தியானம் செய்வதற்கேற்ற ஆலயம்

"அந்தராத்மா யோகத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தியானம் செய்வதற்குத் தகுந்த சூழ்நிலையை நயினாதீவு அம்பாள் கோயிற் சுற்றாடலிற் காணலாம். நாலாபக்கமும் கடலினாற் சூழப்பட்டு அழகிய சிறு தீவாக நயினாதீவு விளங்குகின்றது. பெளர்ணிமைத் தினத்தன்று நடுநிசியின் போது ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்து தியானஞ் செய்தால் பயங்கரமானதொரு தெய்வீக சக்தி தம்முள் இறங்குவதை உணரலாம். பயங்கரமாக அச்சக்தி இருப்பதற்கு நம்மிடமுள்ள குறைபாடுகளே காரணமாகும். சுயநல வழிகளில் அகம்பாவத்துடன் செல்லும் நம்மனசானது, சக்திவாய்ந்த தெய்வசாந்நியத்துடன் சம்மதப்படும்போது ஒருவித அதிர்ச்சியை அடைகிறது. இந்த அதிர்ச்சியானது 'நான்' என்ற உணர்ச்சியைப் பரித்தியாகஞ் செய்ய நாம் இலேசில் இடம்கொடுப்பதில்ல. ஆனால் 'நான்' என்ற உணர்ச்சி அற்றுப்போகாதவிடத்துத் தெய்வ அருள் கிட்டாது." சித்தர்களும் யோகிகளும் இந்தச் சூழ்நிலையைப் பெரிதும் விரும்பிச் செல்கின்றார்கள்.

Posted on 13/02/13 & edited 13/02/13 @ ,