ஆலய பூசையும் விழாவும்

உஷத்காலம், காலைசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் என ஐந்து கால நித்திய பூசை நடைபெறுகின்றது. கோயிலுக்கென நித்திய மேளம் உண்டு. சிவன், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு ஆகிய ஐவரின் பூஜைத் தினங்கள் ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும். ஆனி மாதத்தில் மகோற்சவம் நடைபெறும். திருவிழா பத்து நாள் நடைபெறும். புரட்டாதியில் நவராத்திரி பூசை சிறப்பாக நடைபெறும். பகலிற் சங்கபிஷேகமும் இரவில் ஸ்ரீ சக்கர பூசையும் நடைபெறுவதுடன் விஜயதசமியன்று அம்பாயூத பூசையும் வன்னிவிருட்ச பூசையும் நடைபெறும்.

இவ்வாலயத்திற் பாரம்பரியமாகச் சந்தான கோபாலப் பிரதிஷ்டை செய்த அளவிறந்த பக்தர்கள் புத்திர சந்தானமுடையவர்களாய் மீண்டும் அம்பாள் தரிசனை செய்து விலை மதித்தற்கரிய திருவாபரணம், வாகனம், தீபம் முதலியவற்றைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கின்றனர். இந்தக் கோயிலில் அழகான கைலாச வாகனம், சர்ப்ப வாகனம், காமதேனு வாகனம் முதலியன உண்டு. இவை யாவும் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்து உதவியனவாகும்.

Posted on 13/02/13 & edited 13/02/13 @ ,