nayinai's blog

நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த
கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப்
பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை
மூலம் வணங்குவோம்
செஞ்சடையில் விஞ்சுகுளிர்
கஙகைநனி பொங்குமெழில்
சங்கரனின் அங்கமதனில்
தங்கவொரு பஙகுபெறு
மங்கைதவ கொஞ்சிமகிழ்
கும்பமுக ஞான சுதனே
மிஞ்சுகவின் மஞ்ஞை குறவஞ்சி
மிக அஞ்ச மாதங்கமென
வந்த பொருளே மஞ்சுலவு
கஞ்சமலர் மஞ்சரி இலங்கு பணை
புங்கமணி மார்பழகனே
வஞ்சமதுதஞ்சமடை
நெஞ்சமுடை வஞ்சர நெறி
கொஞ்சமெனுமணுகாமலே
மஞ்சுமரவிந்த மலர்ப் பாதமிணை
தந்துவெனை துஙகமுறவே ஆளுவாய்
அஞ்சீத மங்குல்பொழில் ஆன்றவேர
நயினைவரு செம்மணத்தம்புலத்தே
சேர்வுற்ற ஸ்ரீ வீரகத்திவினாயகனெனச்
சிறப்புற்ற பிள்ளையாரே

- கலைவாரிதி தருமலிங்கம்

நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு, பாய்மரக்கப்பல் போன்றவற்றின் மூலம் ஊர்காவற்றுறை, காரைதீவு சென்று நடந்தோ வண்டியிலோ செல்வர். நடப்பவர் தலைச்சுமைகளை இறக்கி இளைப்பாறுவதற்கு வசதியாக சுமை தாங்கிக் கற்களும் தங்கு மண்டபங்களும் இடையில் இருக்கும் கல்லுண்டாய் வழுக்கி ஆற்றுப் பாலத்தருகில் அத்தகைய சுமைதாங்கிக் கற்கள் சமீப காலம் வரை இருந்தன.
இன்னொரு வழியில் செல்வதாயின் புங்குடுதீவு கரைக்கு சென்று லைடன் தீவுக்கு கடல் கடந்து அராலிப் பக்கமாகவோ பண்ணைப் பக்கமாகவோ யாழ் நகர் செல்வர். இவ்வழிகளால் யாழ்ப்பாணம் போய்த்திரும்ப பல நாட்கள் எடுத்தன. சுமைகளை பல இடங்களில் ஏற்றி இறக்குவதில் சிரமங்களும் இருந்தன.

எங்கள் திருநாடே!!

comments: 0

எங்கள் திருநாடே!!
ஈழவளநாடே!!
பொங்கு தமிழ்கண்டு
புகழ்பெற்ற பெருநிலமே!
அன்னை உந்தன் விலங் கொடிக்க
தன்னைத் தந்த மறவர் வாழ்க!
தரணி போற்றும் தானைத் தலைவன்
தளபதிகள் நீவிர் வாழ்க!
தலைநகரே! திருமலையே!
தாவிவரும் கடலலையே!
தமிழ் மண்ணை முத்தமிட
தவமென்ன நீ செய்தாய்?
செந்தமிழே யாழ்நிலமே!
சிறப்பான தமிழ் மண்ணே!
சந்ததிகள் பல போற்றும்
சங்கிலியன் திருநாடே!
வீரம் விளைகின்ற
விலை போகாப் பெருநிலமே!
வன்னி வயல்பரப்பே!
வளம்கொழிக்கும் தாயகமே!!
முத்து விளைநிலமே!
மன்னார் கடல் அலையே!
மூழ்கிக் குளித்துவரும்
முத்தமிழே நீ வாழி!
கட்டவிழ்ந்த போதும் எமைக்
காத்து நின்ற தமிழ் மண்ணே!
மொட்டவிழ்ந்த தாமரையே!
மட்டுநகர் நீ அழகே!
முல்லை நிலமே!
மூத்த தமிழ்க்குடியே!
உன்னைப் பிரிந்ததனால்
உயிரை நாமிழந்தோம்!
மண்ணில் புதைத்துவிட்டோம்
மறத்தமிழர் குலம் உன்னை!!
நீ சிந்திய இரத்தத்தில்
சிவந்தது தமிழீழம்!

பாட்டும் பதமும - 8 - தூது

comments: 0

ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி சுமக்கிறான். அதனை வெளிக்காட்டாமல் இருப்பதுவே மனிதப் பண்பாகின்றது.
.
கால ஓட்டத்தில் கருத்துப் பரிமாற்றங்களும், தொடர்புச் சாதனங்களும் நான் முந்தி, நீ முந்தி என மனிதனை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அண்மைக் காலங்களில்கூடத் தொலைபேசி இல்லாத கிராமங்கள் இருந்தன. ஆனால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.
.
விஞ்ஞானம் மனிதகுலத்தைப் பயம்காட்டித் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எதையும் சாதிக்கும் திறன் படைத்த விஞ்ஞானத்தால் மனித எண்ணங்களை மட்டும் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.
.
இந்த உலகம் சிந்திப்பவர் கைகளுக்குள் சிறகடித்துப் பறக்கின்றது. இந்த உலகத்தில் விஞ்ஞானிகளைவிடக் கவிஞர்களே அதிகம் சிந்திக்கின்றார்கள் எனக் கண்டுபிடித்ததும் விஞ்ஞானம்தான்.
.

பூ முத்தம் நீ தந்தால்!

comments: 0
சின்ன இதழ் பூச்சரமே!
செம்பவளத் தாமரையே!!
சிந்துகின்ற புன்னகையில்
சித்தமது கலங்குதடி!!


அன்றலர்ந்த தாமரையே!
அழகுமலர்த் தேவதையே!
பிஞ்சுமுகம் பார்க்கையிலே
பேசும்மொழி எதுக்கடி?


முல்லை மலர்ப்பூங்கொடியே!
முத்துமணிப் பாச்சரமே!
கொள்ளையிடும் உன்சிரிப்பில்
கோடிசுகம் இருக்குதடி!!


பூவிழியின் ஓரத்திலே!
புன்னகையின் ஈரத்திலே!
பூமுத்தம் நீ தந்தால்
பூமியிலே சொர்க்கமடி!!
அம்புலியில் அடைக்கலம்
யார் கொடுத்தார்...
கோடையைக் கண்டு
ஒழித்தோடிய குளிர் தென்றலே
வசந்தத்தை வாழவைக்க
கொடுமழை தவிர்த்தாங்கே
காற்றுப் புரவிக்குள்
கார்மேகச் சிக்கெடுக்கக்
கரைகொண்ட கடலாங்கே
நுரைதாங்கி நொடிகிறது.
காய்கின்ற நிலவதனைக்
கானாதேசம் என்றெண்ணி
தளர்நிலைப் பாட்டி - ஆங்கு
தஞ்சம் கொண்டதேனோ...

ஒருவார்த்தை மொழியடி

comments: 0
கண்ணாலே நீமொழிந்த
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
பல்லாயிரம் கவிதை
வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி .


கால்விரல்கள் தீட்டும்
கோலத்தைச் சேர்த்தெடுத்து
ரவிவர்மன் ஓவியத்தையும்
வெல்வேனடி .


நீ சிந்தும் சில்லிடும்
சிரிப்பழகை என்னுள் சேர்த்து
சரித்திரமே படைப்பேனடி .


உன் விரல்கள் காட்டும்
சைகைமொழி கண்டெடுத்து
சுந்தர நயங்கள் சொல்லும்
சாத்திரங்கள் வடிப்பேனடி .


உன் வாய்பேசும்
இன்மொழியில்
எந்தன் காதலையே
காவியமாக்கி உலகுக்கு
உவந்தளிப்பேனடி .
என்னுயிரே! ஒருவார்த்தை மொழிந்திடடி.

மாட்டு பொங்கல்

comments: 0

வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம் என்றெல்லாம் கூப்பிடுவார்கள் கடைசிபிள்ளையாக பிறந்தால் இன்னும் கொஞ்சம் கூட செல்லத்தை பொழிவார்கள் என்ன மாதிரி இடையில பிறந்தால் சிறு சிறு குற்றங்கள்செய்யப்படும் போதெல்லாம் வைக்கப்படும் பெயர்களில் ஒன்று தான் மாடு. சில நேரங்களில் மிகவும் பாசமாக எருமைமாடு என்று அழைப்பார்கள் .சில இடங்களில் நடவடிக்கைகளும் அப்படி தான் இருக்கும் .மூத்த பிள்ளை பிறக்கும் பொழுது மாமா சித்தப்பா பெரியப்பா மச்சான் என்று எல்லோரும் சங்கிலி காப்பு மோதிரம் என்று கொண்டுவந்து போடுவார்கள் .இடுப்புக்கும் வெள்ளியில் அரைநாண் கயிறு போடுவார்கள் .நமக்கு மாட்டுக்கு கழுத்துக்கு கட்டுறமாதிரி ஒரு நூல்தான் கிடைக்கும் .இடுப்புக்கும் அதே நூல் தான் .

விடை தருவாயா‏

comments: 0
இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த
இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள்
மீட்டபடாத வீணையின் இனிய ராகங்களாய்
மிதந்து நாடி நரம்புகளில் ஓடித்திரிகிறது,,,


தொலை தூர நிலாவில் பார்த்த அழகு முகம்
தெருவோரம் விழி நுகராமல் செல்லும் வேளை
வேதனையின் வடுக்கள் உன் ஞாபகங்களை
வெளிப்படுத்தி இதய கதவுகளை உரசுகிறது,,,


இதமான காற்றுகூட என்னை தொடவிரும்பாமல்
இதயத்தை அழுத்தி நெஞ்சும் வலிக்கிறது
மறுபடியும் உன்பார்வை படும் வேளை எல்லாம்
ஏமாற்றபட்ட ஏழையாய் நின்று எட்டி பார்க்கிறது ,,,,


நம்பிக்கை மீண்டும் மீண்டும் மூளை
நரம்புகளை மீட்டுக்கொண்டே இருக்கிறது
கால ஓட்டத்தில் காதருகில் கதை பேசி
கண்கள் சந்தித்து காது மடல் வருடி
மூக்குகள் மூச்சு காற்றை சுவாசித்து
இதழ்கள் பனிக்கும் காலம் வருமா ,,,அன்பே
இல்லை என் இதயமே நின்று போகுமா ,,,,,
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!”

குறுந்தொகை (167)
பாடியவர்: கூடலூர் கிழார்

Pages