நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான்

நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த
கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப்
பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை
மூலம் வணங்குவோம்
செஞ்சடையில் விஞ்சுகுளிர்
கஙகைநனி பொங்குமெழில்
சங்கரனின் அங்கமதனில்
தங்கவொரு பஙகுபெறு
மங்கைதவ கொஞ்சிமகிழ்
கும்பமுக ஞான சுதனே
மிஞ்சுகவின் மஞ்ஞை குறவஞ்சி
மிக அஞ்ச மாதங்கமென
வந்த பொருளே மஞ்சுலவு
கஞ்சமலர் மஞ்சரி இலங்கு பணை
புங்கமணி மார்பழகனே
வஞ்சமதுதஞ்சமடை
நெஞ்சமுடை வஞ்சர நெறி
கொஞ்சமெனுமணுகாமலே
மஞ்சுமரவிந்த மலர்ப் பாதமிணை
தந்துவெனை துஙகமுறவே ஆளுவாய்
அஞ்சீத மங்குல்பொழில் ஆன்றவேர
நயினைவரு செம்மணத்தம்புலத்தே
சேர்வுற்ற ஸ்ரீ வீரகத்திவினாயகனெனச்
சிறப்புற்ற பிள்ளையாரே

- கலைவாரிதி தருமலிங்கம்

Posted on 05/02/17 & edited 05/02/17 @ Nainativu, LK