காளி அம்மன் கோயில்
[ Photo courtesy : Nayinai Waran ]
காளி அம்மன் கோயில், நயினாதீவு 5ஆம் வட்டாரத்தில் பிரண்டைக்காடு என்னும் காணியில் கிழக்கு நோக்கிய வாயிலை உடைய காணியில் கிழக்கு நோக்கிய வாயிலை உடையதாக விளங்குகின்றது. சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை விஸ்வகுலமக்கள் நன்கு பரிபாலனம் செய்துவருகின்றனர். இக் கோயிலில் காணியின் எழுந்தருளி மூர்த்தியும் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அலங்காரத் திருவிழா இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றது.