
Full Name | : தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் |
---|---|
Title | : 22/03/1926 |
Born | : |
Native | : |
Residence | : |
Occupation | : |
Education | : |
Awards | : |
Spouse | : |
Website | : |
பணி ஓய்வு பெற்ற அதிபர்
பல பாலசிங்கங்கள் எம்மூரில் இருந்த படியினால் இவரை செல்லமாக எம்மூரவர்கள் 'நெட்டையற்ற பாலசிங்கம்'என அன்பாக
அழைப்பர். இவரின் தந்தையர் 6'உயரத்திற்கு கூடியவர். தாமோதரம்பிள்ளை நாகமுத்து தம்பதியினருக்கு மகனாக 22.03.1926 ம் ஆண்டு நயினாதீவில் பிறந்தார். ஆரம்ப கல்வியை தில்லையம்பல வித்தியாலயத்திலும் இடைநிலை கல்வியை கணேச வித்தியாலயத்திலும் கற்றுத் தேறினார். இந்து பரிபாலன சபையினரின் (Hindu Board) முகாமைக்குட்பட்ட பாடசாலையில் முதல் நியமனம் கிடைத்து நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றி பின் நுவரெலியா இராகலை
மகாவித்தியாலயத்திற்கு மாற்றப்பட்ட போது பல அறிமுகங்களைத் தேடிக் கொண்டார். நயினாதீவுக்கு மாற்றலாகி வந்து நாகபூசனி
வித்தியாசாலைத் தலைமைப் பொறுப்பை ஏற்று நடாத்தி வந்தார்.
இளமைக் காலத்தில் சிறந்த அறிவிப்பாளராகவும் பத்திரிகை நிருபராகவும் இருந்துள்ளார். எல்லோருடனும் சகஜமாக பழகும் பண்பாளர். அறிமுகமில்லாதவர்களை ஆதரித்து அவர்களுக்கு உதவி செய்து விருந்தளித்து அனுப்பும் ஆற்றல் உள்ளவர்வர். நல்ல நடிகருமாவார். வீரகேசரியின் செய்தியாளராக 15 வருடம் சேவையாற்றினார். இவரது செய்திகள் கட்டமிடப்பட்டு செய்திகளாக வெளிவந்தன. நயினாதீவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு சிறந்த அறிவிப்பாளராகத் தொண்டாற்றியவர் 'அனுரா சேக்கஸ்' இங்கு நடைபெற்ற போதும் நல்ல முறையில் அறிவிப்பாளராக சேவை செய்தவர். நாடகாசிரியர் நலமுடன் வாழ வேண்டுகின்றோம்.